ஜூலை 19 உறுதி.. 50எம்பி கேமரா.. 120W சார்ஜிங்.. வருகிறது புது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே70 அல்ட்ரா (Redmi K70 Ultra) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த புதிய ரெட்மி போன் ஆனது வரும் ஜூலை 19 -ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக ஒஎல்இடி டிஸ்பிளே, டைமன்சிட்டி 9300 பிளஸ் சிப்செட், 5500எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான ரெட்மி கே70 அல்ட்ரா போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரெட்மி கே70 அல்ட்ரா அம்சங்கள் (Redmi K70 Ultra Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9300 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 9300+ SoC) வசதியைக் கொண்டு வெளிவரும் ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன். எனவே வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

அதேபோல் 1.5கே பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே(1.5K flat OLED) வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) கொண்டுள்ளது இந்த ரெட்மி கே70 அல்ட்ரா போன். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்906 சென்சார் (Sony IMX906 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
குறிப்பாக 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. 5ஜிஇ டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஜூலை 19-ம் தேதி இந்த புதிய ரெட்மி கே70 அல்ட்ரா சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்பின்பு சில வாரங்கள் கழித்து உலக சந்தை மற்றும் இந்தியாவில் இந்த ரெட்மி போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ரெட்மி கே70 அல்ட்ரா போன் ஆனது ரூ.23,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








