ஜூலை 18 வரை வெயிட் பண்ணுங்க.. OLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. வருகிறது தரமான Redmi போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே70 அல்ட்ரா (Redmi K70 Ultra) ஸ்மார்ட்போனை இந்த மாதம் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி வரும் ஜூலை 18-ம் தேதி இந்த புதிய ரெட்மி போன் சீனாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் சீனாவில் இந்த போன் அறிமுகமான சில நாட்களில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக டிரிபிள் ரியர் கேமரா, ஒஎல்இடி டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி கே70 அல்ட்ரா அம்சங்கள் ( Redmi K70 Ultra Specifications): 1.5கே பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே (1.5K flat OLED) வசதியுடன் இந்த புதிய ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. எனவே இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 9300 பிளஸ் சிப்செட்(MediaTek Dimensity 9300+ SoC) வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
அதேபோல் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance)ஆதரவுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா போன் அறிமுகமாகும். மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி கே70 அல்ட்ரா போன் வெளிவரும். அதன்படி 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இதில் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும், அதேசமயம் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த போன். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் வெளியான தகவலின்படி, இந்த புதிய ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ரூ.23,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனுக்கு இந்தியச் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








