அதகளம் பண்ணும் ரெட்மி.. 108MP கேமரா.. 120W சார்ஜிங்.. 516GB மெமரி.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போனை வரும் 2024-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
ரெட்மி கே70 அல்ட்ரா அம்சங்கள் (Redmi K70 Ultra Specifications): 2கே ரெசல்யூஷன் (2K Resolution) கொண்ட 8டி ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஒஎல்இடி டிஸ்பிளே என்பதால் தனித்துவமான திரை அனுபவம் கிடைக்கும். அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

குறிப்பாக ஸ்லிம் பெசல்ஸ் (slim bezels) வடிவமைப்பு கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் இந்த ரெட்மி போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட் (MediaTek Dimensity 9300 chipset) வசதியுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த போனுக்கு மாலி-ஜி720 எம்பி12 ஜிபியுகிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
அதாவது இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும். குறிப்பாக 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி சோனி IMX LYTIA 800 பிரைமரி கேமரா + ஒஐஎஸ் ஆதவு கொண்ட 108எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ரெட்மி போன் வெளிவரும்.

ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். 5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்த 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
குறிப்பாக இந்த போனை இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரெட்மி போன் வெளிவரும். அதேபோல் இந்தியாவில் ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








