மிரள விடும் ரெட்மி.. 108MP கேமரா.. 24GB ரேம்.. 1TB மெமரி.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருகிறது ரெட்மி ஸ்மார்ட்போன்கள்.
இந்நிலையில் ரெட்மி நிறுவனம் மீண்டும் ஒரு அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது ரெட்மி கே70 அல்ட்ரா எனும் ஸ்மார்ட்போனை வரும் மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி நிறுவனம். மேலும் இப்போது ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரெட்மி கே70 அல்ட்ரா அம்சங்கள் (Redmi K70 Ultra specifications): 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், 2600 நிட்ஸ் பீக் ப்ரைட்நஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த டிஸ்பிளே அனுபவத்தைக் கொடுக்கும்.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9300 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 9300+ SoC) வசதியுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு மாலி-ஜி720 எம்பி12 ஜிபியு (Mali-G720 MP12 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
குறிப்பாக 24ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி மெமரி வரை ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இதில் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
50எம்பி சோனி LYTIA 800 சென்சார் + 108எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் + டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளன. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த ரெட்மி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ரெட்மி போன்.
photo courtesy: mysmartprice, tipster Digital Chat Station (DCS)


Click it and Unblock the Notifications








