Home
Mobile

மிரண்டு போவீங்க.. 50எம்பி கேமரா.. Snapdragon 8 Gen 2.. வருகிறது தரமான ரெட்மி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது விரைவில் ரெட்மி கே70 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ரெட்மி போன் முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு தான் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும். இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

அதாவது ரெட்மி அறிமுகம் செய்ய உள்ள ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் உதவியுடன் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த போனின் சிப்செட்.

மிரண்டு போவீங்க.. வருகிறது தரமான ரெட்மி போன்.. எந்த மாடல்?

மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அல்ட்ரா வைடு கேமரா மற்றும் மேக்ரோ கேமராக்களும் இந்த போனில் இருக்கும். இதுதவிர செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ரெட்மி கே70 (Redmi K70) ஸ்மார்ட்போன் 5500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (90W charging) வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே70 ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ரெட்மி கே70 ஸ்மார்ட்போனில் 6.67-இன்ச் 2கே ஒஎல்இடி டிஸ்பிளே(OLED display) வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த திரை அனுபவம் வழங்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக ஒஎல்இடி டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாகப் பார்ப்போம்.

மிரண்டு போவீங்க.. வருகிறது தரமான ரெட்மி போன்.. எந்த மாடல்?

ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் எடை மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.

குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். அதேசமயம் இந்த ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் உடன் ரெட்மி கே70 ப்ரோ, ரெட்மி கே70இ ஆகிய ஸ்மார்ட்போன்களும் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Best Mobiles in India

English summary
Redmi K70 smartphone will be launched with Snapdragon 8 Gen 2: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X