Home
Mobile

ஆர்டர் தெறிக்குது.. 24GB ரேம்.. 1TB மெமரி.. OV டெலி.. 120W சார்ஜிங்.. OIS கேமரா.. எந்த மாடல்?

இப்படிவொரு போனா? என்று கேட்கும்படி 24 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, ஓம்னிவிஷன் டெலிபோட்டோ கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற ஒட்டுமொத்த பிரம்மாண்ட அம்சங்களுடன் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி கே70 ப்ரோ அம்சங்கள் (Redmi K70 Pro Specifications): இந்த ரெட்மி ப்ரோ மாடலில் பிரம்மாண்ட கேமரா மற்றும் பேட்டரி சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமராவானது, லைட் ப்யூஷன் 800 (Light Fusion 800) சென்சாருடன் கொடுக்கப்பட்டுள்ளது. ஓம்னிவிஷன் ஓவி13பி10 (OmniVision OV13B10) சென்சாருடன் 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

24GB ரேம்.. 1TB மெமரி.. OV டெலி.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

அதோடு 50 எம்பி டெலிபோட்டோ கேமரா ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OmniVision OV50D40) சென்சாருடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் 2X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது. இதுவொரு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைஷேசன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கேமராவாகும்.

அதோடு எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைஷேசன் (Electronic Image Stabilization) டெக்னாலஜியும் கொண்டிருக்கிறது. ஆகவே, கேமராவில் இந்த போன் பின்னிப்பெடல் எடுக்கும் வகையில் இருக்கும். அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இந்த ரெட்மி போனின் 5000mAh பேட்டரியானது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் வருகிறது.

அதேபோல ஆடியோவும் டைப்-சி போர்ட்டில் இடம் பெற்றுள்ளது. டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த போனின் டிஸ்பிளேவும் மிரட்டலாகவே இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.

24GB ரேம்.. 1TB மெமரி.. OV டெலி.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, வீடியோ குவாலிட்டி கிரிஸ்டல் கிளியராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ரெட்மி கே70 ப்ரோ போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட 4 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. இவ்வளவு ரேம் கொண்டிருப்பினும், மிட்-ரேஞ்ச் பட்ஜெட் விலையே கொண்டிருக்கின்றன.

இந்த போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட்கள் கேமிங் பிரியர்களுக்கு பக்கவான பர்ஃபாமென்ஸ் கொடுக்கக்கூடியது. இந்த மாடலில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது.

24GB ரேம்.. 1TB மெமரி.. OV டெலி.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்ச போனின் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.39,435ஆகவும், 16 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.42,340ஆகவும் இருக்கிறது. அதேபோல 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.45,870ஆகவும், 24 ஜிபி + 1 டிபி வேரியண்ட்டின் விலை ரூ.52,570ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் ஒருசில மாதங்களில் வெளியாகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K70 Pro With 50MP Telephoto Camera, 16GB RAM Launched in China Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X