Home
Mobile

ஆடிப்போச்சு மார்கெட்.. 24GB ரேம்.. 120W சார்ஜிங்.. OIS கேமரா.. 2X ஆப்டிகல் ஜூமிங்.. எந்த மாடல்?

மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ரெட்மி நோட் 13 மாடல்களையே தூக்கிசாப்பிடும் விதமாக கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி போன்ற அம்சங்களில் ரெட்மி கே70 (Redmi K70) சீரிஸ் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த போன்களின் சில அம்சங்கள் வெளியாகி மார்கெட்டையே ஆட்டி வைத்திருக்கிறது.

ரெட்மி கே70 ப்ரோ அம்சங்கள் (Redmi K70 Pro Specifications): இந்த ரெட்மி போனில் 6.67 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
இந்த டிஸ்பிளேவானது, கர்வ்ட் மாடல் கிடையாது. மைக்ரோ கர்வ்ட் பிளாட் எட்ஜ் (Micro Curved Flat Edges) மாடலாகும்.

ஆடிப்போச்சு மார்கெட்.. 24GB ரேம்.. 120W சார்ஜிங்.. OIS கேமரா போன்!

இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமரா மாடலாகும். இந்த கேமராவில் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங் (2x Optical Zoom) சப்போர்ட் வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது. இந்த டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டமானது (Triple Rear Camera System) பாக்ஸ் டைப் பிரேம் கொண்டிருக்கிறது.

சொல்லப்போனால், இந்த ரெட்மி கே70 ப்ரோ மாடலே மெட்டல் பிரேம் பாடி (Metal Frame Body) கொண்டிருக்கிறது. இந்த ரெட்மி கே70 ப்ரோ போனில் ஹைபர்ஓஸ் (HyperOS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ஏனென்றால், சமீபத்தில் சீனாவில் வெளியான ஐக்யூ 12 போனில் இதே சிப்செட் பயன்படுத்தப்பட்டு அதில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) வருகிறது.
இந்த ரெட்மி கே70 ப்ரோ போனில் 24 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆடிப்போச்சு மார்கெட்.. 24GB ரேம்.. 120W சார்ஜிங்.. OIS கேமரா போன்!

கேமராவை போலவே பிரம்மாண்ட பேட்டரி செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,120mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி மாடலில் கிளாஸ் டிசைனில் பிளாக் (Black) மற்றும் வைட் (White) ஆகிய இரண்டு கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

இந்த கலர்களில் போட்டோக்கள் மற்றும் மேற்கூறிய அம்சங்களை மட்டுமே இப்போதைக்கு ரெட்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இதன் மற்ற அம்சங்கள் வரும் நாட்களில் அடுத்தடுத்து வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த போனோடு ரெட்மி கே70ஈ மற்றும் ரெட்மி கே70 (Redmi K70) மாடலின் அம்சங்களையும் ரெட்மி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ரெட்மி கே70ஈ அம்சங்கள் (Redmi K70E Specifications): இந்த ரெட்மி மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 அல்ட்ரா எஸ்ஓசி (MediaTek Dimensity 8300 Ultra SoC) சிப்செட் வருகிறது. முந்தைய மாடலை போலவே 6.67 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இது அமோலெட் டிஸ்பிளேவாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 1,920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி போனில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,500mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆடிப்போச்சு மார்கெட்.. 24GB ரேம்.. 120W சார்ஜிங்.. OIS கேமரா போன்!

இந்த ரெட்மி மாடலில் சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) வருகிறது. அதேபோல ரெட்மி கே70 மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 எஸ்ஓசி (MediaTek Dimensity 8300 SoC) சிப்செட் வருகிறது. இந்த மூன்று மாடல்களும் வரும் நவம்பர் 29ஆம் தேதி சீனாவில் வெளியாகின்றன. அதன்பின் அடுத்தடுத்த நாடுகளில் அறிமுகம் செய்யப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
Redmi K70 Pro With 50MP Camera, Snapdragon 8 Gen 3 Launch on November 29 in China Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X