சும்மா தீயா இருக்குது பாஸ்! தரமான அம்சங்களுடன் களமிறங்கும் புதிய Redmi போன்.! ரெடியா இருங்க..
ரெட்மி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரெட்மி நிறுவனம் விரைவில் அசத்தலான ரெட்மி கே70 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது இந்த ரெட்மி கே70 ப்ரோ தரமான சிப்செட் உடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ரெட்மி கே70 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த புதிய ரெட்மி கே70 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும்.

குறிப்பாக இந்த ரெட்மி கே70 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் வசதி உள்ளது. இந்த போன் கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற பல்வேறு பயன்களுக்கு அருமையாகப் பயன்படும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் ரெட்மி கே70 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.
5120 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே70 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதிடன் இந்த போன் அறிமுகமாகும். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் தரமான கேமரா, 5ஜி ஆதரவு, 16ஜிபி ரேம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி கே70 ப்ரோ போன் அறிமுகமாகும். அதேபோல் சமீபத்தில் அறிமுகமான ரெட்மி நோட் 12ஆர் போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது ரெட்மி நோட் 12ஆர் ஸ்மார்ட்போன். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ரெட்மி நோட் 12ஆர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது ரெட்மி நோட் 12ஆர் ஸ்மார்ட்போன். மேலும் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12ஆர் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான ரெட்மி நோட் 12ஆர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ரெட்மி நோட் 12ஆர் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை RMB 999 (இந்திய மதிப்பில் ரூ.11,300).


Click it and Unblock the Notifications








