Home
Mobile

வந்தா ராஜா தான்.. 120W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 24ஜிபி ரேம்.. அசத்தும் ரெட்மி.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ரெட்மி கே70 ப்ரோ ஆனது முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதன்பின்பு இந்த போன் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் இந்த ரெட்மி கே70 ப்ரோ போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் சற்று வித்தியாசமான வடிவமைப்புடன் இந்த ரெட்மி போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ரெட்மி கே70 ப்ரோ போனின் அம்சங்கள இப்போது பார்ப்போம்.

வந்தா ராஜா தான்.. 120W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. அசத்தும் ரெட்மி..

அதாவது 2கே அமோலெட்(2K AMOLED)டிஸ்பிளேவை கொண்டு இந்த ரெட்மி கே70 ப்ரோ போன் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதேபோல் 24ஜிபி ரேம் மற்றும் 1டிபி மெமரி உடன் இந்த ரெட்மி கே70 ப்ரோ போன் அறிமுகமாகும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் வசதியுடன் இந்த ரெட்மி கே70 ப்ரோ போன் வெளிவரும். பின்பு இந்த போனில் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5120எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு டெலிபோட்டோ சென்சார் எனும் கேமராவும் இந்த போனில் உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ரெட்மி கே70 ப்ரோ போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த ரெட்மி கே70 ப்ரோ போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. விரைவில் ரெட்மி கே70 ப்ரோ போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ரெட்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த ரெட்மி 12 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம். அதாவது ரெட்மி 12 5ஜி ஆனது 6.79 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி 12 5ஜி போன். இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

வந்தா ராஜா தான்.. 120W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. அசத்தும் ரெட்மி..

ரெட்மி 12 5ஜி போனில் ரெட்மியின் எம்ஐயூஐ 14 யூஐ ஓஎஸ் (MIUI 14 UI OS) மற்றும் மாலி - ஜி52 ஜிபியு (Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் இந்த ரெட்மி போனில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வசதி இருக்கிறது.

IP53 தர ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார், இன்ப்ராரெட் சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் ஃபாயரிங் லவுட்ஸ்பீக்கர், ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 12 5ஜி போன். குறிப்பாக இந்த ரெட்மி 12 5ஜி போன் ஆனது ரூ.11,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K70 Pro design and specifications leaked online: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X