Home
Mobile

இதுதான்டா கேமரா.. ஹைப் ஏத்தும் ரெட்மி.. OV டெலிபோட்டோ.. 2X ஆப்டிகல் ஜூம்.. OIS டெக்னாலஜி.. எந்த மாடல்?

ரெட்மி கே70 சீரிஸ் (Redmi K70 Series) மாடல்களின் கேமரா அம்சங்கள் வெளியாகி ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. அப்படி என்ன கேமரா அம்சங்கள் அதில் இருக்கின்றன? இந்த மாடல்களின் வெளியீட்டு தேதி எப்போது? உள்ளிட்ட முழு விவரங்கள் இதோ.

ரெட்மி கே70 அம்சங்கள் (Redmi K70 Specification): இந்த போனில் ஓம்னிவிஷன் ஓவி50ஈ ( OmniVision OV50e) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

ஹைப்பில் ரெட்மி.. OV டெலிபோட்டோ.. 2X ஆப்டிகல் ஜூம்.. OIS டெக்னாலஜி!

இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) மற்றும் ஹைபர்ஓஎஸ் (HyperOS) கொண்டிருக்கிறது. இந்த போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது.

இந்த ரெட்மி கே70 போனில் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அதேபோல 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் வருகிறது. இந்த போனில் ஓஎல்இடி டிஸ்பிளே வருகிறது.

ரெட்மி கே70 ப்ரோ அம்சங்கள் (Redmi K70 Pro Specification): இந்த மாடலிலும் ஓம்னிவிஷன் ஓவி50ஈ (OmniVision OV50e) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் ஓம்னிவிஷன் ஓவி50டி (OmniVision OV50d) சென்சார் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.

ஹைப்பில் ரெட்மி.. OV டெலிபோட்டோ.. 2X ஆப்டிகல் ஜூம்.. OIS டெக்னாலஜி!

இந்த கேமராவில் 2x ஆப்டிகல் ஜூமிங் சப்போர்ட் வருகிறது. இந்த ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. 120Hz ரெப்ஃரெஷ் ரேட் மற்றும் 2K ரெசொலூஷன் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே வருகிறது.

இந்த மாடலில் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் இருக்கின்றன. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,120mAh பேட்டரி கொண்டிருக்கிறது.

ரெட்மி கே70ஈ அம்சங்கள் (Redmi K70e Specification): இந்த போனில் 64 எம்பி மெயின் கேமராவானது, ஓம்னிவிஷன் ஓவி64பி (OmniVision OV64B) சென்சாருடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 அல்ட்ரா (MediaTek Dimensity 8300 Ultra) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,500mAh பேட்டரி வருகிறது. 6.67 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே வருகிறது. அதில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெப்ஃரெஷ் ரேட் வருகிறது.

ஹைப்பில் ரெட்மி.. OV டெலிபோட்டோ.. 2X ஆப்டிகல் ஜூம்.. OIS டெக்னாலஜி!

இந்த மூன்று போன்களும் பக்கா பிரீமியம் குவாலிட்டியில் பிளாக் (Black), வைட் (White), ப்ளூ (Blue) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய கலர்களில் வெளியாகின்றன. வரும் நவம்பர் 29ஆம் தேதி சீனாவில் பிரம்மாண்டமாக அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த மாடல்களின் ஆரம்ப விலை ரூ.35,000 முதல் ரூ.40,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K70, K70 Pro, K70e Camera Specifications Tipped Before November 29 Launch in China
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X