Home
Mobile

அலறும் மார்க்கெட்.. 24GB ரேம், Sony கேமரா, OLED டிஸ்பிளே.. புதிய Redmi 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைமன்சிட்டி பிராசஸர், 50எம்பி சோனி கேமரா, ஒஎல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அலறும் மார்க்கெட்.. புதிய Redmi 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

6.67-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே ( 1.5K OLED display) வசதியுடன் இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (480Hz touch sampling rate), எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன.
குறிப்பாக இதில் ஒஎல்இடி டிஸ்பிளே இருப்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

3.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 9200 பிளஸ் 4என்எம் பிராசஸர் (Octa Core Dimensity 9200+ 4nm processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன். அதேபோல் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை கொண்டு இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 12ஜிபி/16ஜிபி/24ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி/1டிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் யுஎஸ்பி
டைப்-சி ஆடியோ, டூயல் ஸ்பீக்கர்கள்,டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் ரெட்மி
ஸ்மார்ட்போன்.

50எம்பி சோனி ஐஎம்எஸ்800 சென்சார் (Sony IMX800 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி சோனி ஐஎம்எக்ஸ்596 ( Sony IMX596) கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக பாஸ்ட் சார்ஜிங் வசதிக்கு தகுந்தபடி சிறந்த பாதுகாப்பு வசதி இதில் உள்ளது.

அலறும் மார்க்கெட்.. புதிய Redmi 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போனின் எடை 204 கிராம் ஆகும். பின்பு இன் டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • ரெட்மி கே60 அல்ட்ரா விலை: 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி கே60 அல்ட்ரா போனின் விலை 2599 யுவான் (yuan) (இந்திய மதிப்பில் ரூ.29,755)
  • 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி கே60 அல்ட்ரா மாடலின் விலை 2799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.32,045)
  • 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி கே60 அல்ட்ரா மாடலின் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,355)
  • 16ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி கே60 அல்ட்ரா மாடலின் விலை 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.38,015)
  • 24ஜிபி ரேட் + 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி கே60 அல்ட்ரா மாடலின் விலை 3599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.42,210)

தற்போத இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் 24ஜிபி ரேம் கொண்ட ரெட்மி கே60 அல்ட்ரா மாடல் மட்டும் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K60 Ultra with 24GB RAM phone launched: check specifications, Price, Sale Date And More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X