Home
Mobile

ஸ்டைலும், பெர்ஃபார்மென்ஸும் செம..16ஜிபி ரேம் உடன் களமிறங்கும் புதிய Redmi போன்! ரெடியா இருங்க..

ரெட்மி நிறுவனம் சமீபத்தில் ரெட்மி 12 5ஜி மற்றும் ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த இரண்டு போன்களும் கம்மி விலையில் அறிமுகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது ரெட்மி.

அதாவது ரெட்மி நிறுவனம் விரைவில் உலக சந்தை மற்றும் இந்தியச் சந்தையில் ரெட்மி கே60 அல்ட்ரா எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கேமிங் பயனர்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட முரட்டுத்தனமான ஸ்மார்ட்போன் ஆகும். குறிப்பாக இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

16ஜிபி ரேம் உடன் களமிறங்கும் புதிய Redmi போன்.! ரெடியா இருங்க..

மேலும் இணையத்தில் வெளியான இந்த ரெட்மி கே60 அல்ட்ரா போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் (MediaTek Dimensity 9200+) சிப்செட் வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக இயக்க முடியும். அதேபோல் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த அசத்தலான போன்.

வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்கள் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புத்தம் புதிய ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ரெட்மி கே60 அல்ட்ரா போன் அறிமுகமாகும். பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி, 108எம்பி ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி கே60 அல்ட்ரா போன் இந்தியாவுக்கு வரும்.

ரெட்மி கே60 அல்ட்ரா போனின் மாடல் எண் 23078RKD5C என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டைமன்சிட்டி சிப்செட், 108எம்பி கேமரா, 16எம்பி ரேம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் நேற்று அறிமுகம் செய்த ரெட்மி 12 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி 12 5ஜி போன் ஆனது மொத்தம் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்ட் ஆண்டு ரூ.1,000 என்கிற வங்கிச் சலுகைக்குப் பிறகு ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஆப்ஷன் ரூ.12,499 விலையிலும், கடைசியாக உள்ள 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வேரியண்ட் ரூ.14,499 விலையிலும் வாங்க முடியும்.

16ஜிபி ரேம் உடன் களமிறங்கும் புதிய Redmi போன்.! ரெடியா இருங்க..

ரெட்மி 12 5ஜி போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 X 2400 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 6.79 இன்ச் ஃபுல்எச்டி டிஸ்பிளே கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் மாலி-ஜி52 ஜிபியு உடனான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 12 5ஜி போன். எனவே இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50 எம்பி ப்ரைமரி ஷூட்டர் + 8 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2 எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது இந்த ரெட்மி 12 5ஜி போன். மேலும் 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஐபி53 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K60 Ultra phone with MediaTek Dimensity 9200 Plus, 16GB RAM to launch soon: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X