Home
Mobile

அட்ராசக்கை... 100W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் புதிய 5ஜி போனை களமிறக்கும் Redmi.!

ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி கே60 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கேமிங் சிப்செட், தரமான கேமரா, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை பார்ப்போம்.

ரெட்மி கே60 அல்ட்ரா

புதிய ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 9200 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த செயல்திறன் வழங்கும். கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் அறிமுகமாகும்.

100W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் புதிய 5ஜி போனை களமிறக்கும் ரெட்மி.!

இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த போன் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் ரெட்மி கே60 போனின் சிப்செட் மற்றும் சார்ஜிங் வசதி மட்டுமே தெரியவந்துள்ளது. விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் தெரியவரும்.

300 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

அதேபோல் இந்நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நிறுவனம் 300 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து அசத்தி இருக்கிறது. அதாவது இந்த புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனை வெறும் ஐந்து நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக இந்த பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பல்வேறு மக்களுக்குப் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

ரெட்மி நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் ஐந்து நிமிடங்களுக்கு குறைவாகவே எடுத்துக் கொண்டது. குறிப்பாக 300 வாட்ஸ் இம்மார்டல் செகண்ட சார்ஜர் என அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பத்தை தான் ரெட்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

100W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் புதிய 5ஜி போனை களமிறக்கும் ரெட்மி.!

இருந்தபோதிலும் இந்த புதிய சார்ஜரின் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி எந்த ஒரு தகவலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ரெட்மி நிறுவனம் 4100 எம்ஏஎச் பேட்டரி கொண்ட மாடிஃபை செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 டிஸ்கவரி ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யப்படும் வீடியோவை வெளியிட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இதற்கு வேண்டி 4300 எம்ஏஎச் பேட்டரிக்கு மாற்றாக 4100 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. மேலும் அந்நிறுவனம் வெளியிட்ட வீடியோவில் ஸ்மார்ட்போன் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆக வெறும் 2 நிமிடங்கள் 11 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது.

இந்த புதிய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பற்றிய இதர விவரங்களை ரெட்மி நிறுவனம் பின்னர் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் சீனாவில் தற்போது விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன் ஆனது அதிவேக பாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த போன் 300 வாட்ஸ் வயர்டு சார்ஜ் மூலம் சார்ஜ் செய்யப்படும் காட்சிகள் தான் இணையத்தில் அதிக வைரலாகி உள்ளது.

100W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் புதிய 5ஜி போனை களமிறக்கும் ரெட்மி.!

குறிப்பாக ரெட்மி நிறுவனத்தின் பாஸ்ட் சார்ஜிங் வசதியில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற பாஸ்ட் சார்ஜிங் வசதி மிகவும் பயனுள்ள வகையில இருக்கும் என்றே கூறலாம். அதேபோல் இந்த பல்வேறு தரமான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ரெட்மி நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K60 Ultra phone with MediaTek Dimensity 9200 chipset will be launched soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X