iPhone-ல மட்டும் தான் Sony சென்சார் வருமா? நாங்க என்ன சும்மாவா? Redmi K60-ல் சியோமி டிவிஸ்ட்.!

|

Redmi K60 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் சீனாவில் டிசம்பர் 27 ஆம் தேதி (நாளை) அறிமுகமாகிறது. சியோமி நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்ஷிப் போன்கள் அனைத்தும் புதிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் மூன்று பிரீமியம் போன்கள் இருக்கும் என்று Redmi தெரிவித்துள்ளது. இதில் Redmi K60, Redmi K60 Pro மற்றும் Redmi K60e ஆகிய மாடல்கள் அடங்கும். இந்த போனில் என்னென்ன அம்சங்கள் வருகிறது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

தரமான சோனி சென்சார் உடன் Redmi K60 Pro அறிமுகமா?

தரமான சோனி சென்சார் உடன் Redmi K60 Pro அறிமுகமா?

Redmi K60 Pro சிறந்த இன்-கிளாஸ் ஹார்ட்வேர் உடன் சிறந்த அம்சங்களை பேக் செய்துள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. Xiaomi K60 தொடரின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களை கிண்டல் செய்து வருகிறது.

சமீபத்திய டீஸர் Redmi K60 Pro இன் கேமரா விவரக்குறிப்புகளை வெளிப்படுத்துகிறது.

சமீபத்திய டீசரின் படி Redmi K60 Pro ஆனது Sony IMX800 முதன்மை கேமரா சென்சார் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

iPhone-ல மட்டும் தான் சோனி சென்சார் வருமா? நாங்களும் தருவோம் - Xiaomi.!

iPhone-ல மட்டும் தான் சோனி சென்சார் வருமா? நாங்களும் தருவோம் - Xiaomi.!

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஐபோன்களின் கடந்த 10 வருடங்களாக சோனி சென்சார்களை தான் பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுக்க இந்த மேட்டர் பெரியளவில் பேசப்பட்டது.

ஐபோனில் நிறுவனம் IMX703 சென்சார்களை பயன்படுத்தியது. ஆனால், சோனி IMX800 சென்சார்களை கடந்த சில மாடல்களில் சியோமி நிறுவனமும் பயன்படுத்தி வருகிறது.

சீனாவில் இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Xiaomi 13 5G இல் இதே சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போனை பார்த்து உலகமே ஆடிப்போய்டுச்சு.! அண்டர் டிஸ்பிளே கேமராவுடன் Red Magic 8 Pro.!இந்த போனை பார்த்து உலகமே ஆடிப்போய்டுச்சு.! அண்டர் டிஸ்பிளே கேமராவுடன் Red Magic 8 Pro.!

ஐபோனிற்கு நிகரான கிளாரிட்டி இதில் கிடைக்குமா?

ஐபோனிற்கு நிகரான கிளாரிட்டி இதில் கிடைக்குமா?

இதனைத் தொடர்ந்து இப்போது நிறுவனம் அடுத்து வரவிருக்கும் இந்த Redmi ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் f/1.8 துளை மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் கூடிய 50MP Sony IMX800 முதன்மை கேமரா சென்சார் இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சாதனம் Xiaomi Image Brain 2.0 அம்சத்தையும் கொண்டிருக்கும். இது கேமராவின் முக்கிய புகைப்படம் மற்றும் வீடியோ-பிடிப்பு திறன்களை மேம்படுத்த உதவுகிறது.

ஐபோனிற்கு நிகரான கிளாரிட்டியை இது வழங்குமா என்று நாம் செக் செய்ய வேண்டும்.

சியோமி டீஸ் செய்த டிவைஸ் பற்றிய முழு விபரம் என்ன சொல்கிறது?

சியோமி டீஸ் செய்த டிவைஸ் பற்றிய முழு விபரம் என்ன சொல்கிறது?

இந்த சாதனம் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் ப்ரோ மாடலின் வடிவமைப்பை Xiaomi இப்போது டீஸ் செய்துள்ளது.

இது செவ்வக கேமரா தொகுதிக்குள் செங்குத்தாகச் சீரமைக்கப்பட்ட டிரிபிள்-கேமரா அமைப்பை காண்பிக்கிறது.

டீஸர் போனை அதன் சாம்பல் நிறத்தில் கார்பன் ஃபைபர் போன்ற அமைப்புடன் நிறுவனத்தின் போஸ்டர் காண்பித்துள்ளது.

உங்கள் அறைக்கு சரியான டிவி சைஸ் எது? இந்த ஃபார்முலா தெரியாம டிவி வாங்கவே கூடாது.!உங்கள் அறைக்கு சரியான டிவி சைஸ் எது? இந்த ஃபார்முலா தெரியாம டிவி வாங்கவே கூடாது.!

அதிக சக்தி கொண்ட உயர் திறன் சிப்செட்டை பேக் செய்துள்ளதா?

அதிக சக்தி கொண்ட உயர் திறன் சிப்செட்டை பேக் செய்துள்ளதா?

Redmi K60 ப்ரோ போனில் Qualcomm Snapdragon 8 Gen 2 SoC இடம்பெறும் என்பதையும் Xiaomi உறுதிப்படுத்தியுள்ளது. இப்போதைக்கு அதிக சக்தி கொண்ட உயர் திறன் கொண்ட சிப்செட்டாக இந்த சிப்செட் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போனில் ஹீட்டிங் சிக்கலைக் குளிர்விக்க இதில் 5,000 சதுர மிமீ வேப்பர் சேம்பர் கூலிங் லிக்குவிட் பகுதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

எல்லா டீட்டைலும் பக்காவா தெரியும்.! பட்டையை கிளப்பும் 2K டிஸ்பிளே.!

எல்லா டீட்டைலும் பக்காவா தெரியும்.! பட்டையை கிளப்பும் 2K டிஸ்பிளே.!

இது தவிர, K60 சீரிஸ் 2K தெளிவுத்திறனுடன் 12-பிட் டிஸ்ப்ளே மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கும் என்று நிறுவனம் வெளிப்படுத்தியது.

இந்த டிஸ்ப்ளே 1920Hz PWM டிம்மிங், HDR10+, P3 வண்ண வரம்பு மற்றும் டால்பி விஷன் ஆகியவற்றை ஆதரிக்கும்.

இது 120Hz ரெப்ரெஷ் ரேட் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று போன்களும் 6.67' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளதாக வதந்திகள் பரவுகின்றன.

26வது மாடியில் இருந்து கீழே விழுந்த iPhone-க்கு எதுவுமே ஆகலையா.! எப்படி சாத்தியம்?26வது மாடியில் இருந்து கீழே விழுந்த iPhone-க்கு எதுவுமே ஆகலையா.! எப்படி சாத்தியம்?

வயர் மட்டுமில்லை வயர்லெஸ் சார்ஜிங் கூட இருக்கா? அடேங்கப்பா..!

வயர் மட்டுமில்லை வயர்லெஸ் சார்ஜிங் கூட இருக்கா? அடேங்கப்பா..!

Redmi K60 5G ஆனது லெதர் பின் பேனலைக் கொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் வெளி வரும்.

Redmi K60 5G ஆனது 5500mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். இது 30W வயர்லெஸ் சார்ஜிங்குடன் வரலாம். அதேபோல், Redmi K60 Pro மாடல் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi K60e ஆனது 67W வேகமான சார்ஜிங்கை மட்டுமே ஆதரிக்கும் என்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இதில் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

Redmi K60e 5G என்ன மாதிரியான ஸ்மார்ட்போன்.!

Redmi K60e 5G என்ன மாதிரியான ஸ்மார்ட்போன்.!

Redmi K60 5G அல்லது Redmi K60e 5G ஆனது 64MP டிரிபிள்-கேமரா அமைப்பையும் கொண்டிருக்கும். Redmi K60e ஆனது MediaTek Dimensity 8200 SoC ஐக் கொண்டிருக்கும் என்பதை Xiaomi உறுதிப்படுத்தியுள்ளது.

Redmi K60 5G ஆனது Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. Redmi K60 Pro மற்றும் Redmi K60 5G இரண்டும் ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான MIUI 14ஐ பெரும். மறுபக்கம், Redmi K60e ஆனது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 இல் இயங்கும்.

பிப்ரவரி 7-னு சொன்னாங்க.. ஆனா இப்போ ஜனவரி 4ம் தேதியே OnePlus 11 அறிமுகமா?பிப்ரவரி 7-னு சொன்னாங்க.. ஆனா இப்போ ஜனவரி 4ம் தேதியே OnePlus 11 அறிமுகமா?

இந்தியாவில் இந்த Redmi K60 ஸ்மார்ட்போன் சீரிஸ் எப்போது.. என்ன பெயரில் கிடைக்கும்?

இந்தியாவில் இந்த Redmi K60 ஸ்மார்ட்போன் சீரிஸ் எப்போது.. என்ன பெயரில் கிடைக்கும்?

Xiaomi நிறுவனம் இந்தியாவிலும் பிற சந்தைகளிலும் Redmi K60 தொடரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த 3 ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் POCO சாதனங்களாக அறிமுகப்படுத்தப்படலாம் என்ற வதந்தியும் வெளிவந்துள்ளது. Redmi K60 தொடர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி என்றாலும், இது எப்படி? எந்த பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்பதைப் பார்க்க நாங்களும் ஆர்வமாகக் காத்திருக்கிறோம்.

Best Mobiles in India

English summary
Redmi K60 Pro Confirmed With Sony IMX800 Sensor

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X