200எம்பி கேமராவுடன் புதிய ஸ்மார்ட்போன் வாங்க ஆசையா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வருது ரெட்மி போன்.!
சமீபத்தில் ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் புதிய ரெட்மி கே50எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ரெட்மி நிறுவனம்.

ரெட்மி கே50எஸ்
அதாவது வரும் மாதங்களில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த
ரெட்மி கே50எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

AMOLED டிஸ்பிளே
புதிய ரெட்மி கே50எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10பிளஸ் ஆதரவு, டால்பி விஷன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான சிப்செட்
அதேபோல் ரெட்மி கே50எஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த தரமான சிப்செட் வசதி தான் உள்ளது. அதாவது இந்த புதிய போன் ஸ்னாப்டிராகன் 8 + ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். குறிப்பாக MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி கே50எஸ் ஸ்மார்ட்போன்.

அருமையான பேட்டரி
புதிய ரெட்மி கே50எஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. மேலும் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய ரெட்மி கே50எஸ் ஸ்மார்ட்போன் உடன் ரெட்மி கே50எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் கூட அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ரெட்மி கே50எஸ் ஸ்மார்ட்போனை விட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த ரெட்மி கே50எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி கே50எஸ் ப்ரோ
டிப்ஸ்டர் Yogesh Brar தெரிவித்த தகவலின்படி, இந்த ரெட்மி கே50எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர் பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ரெட்மி கே50எஸ் ப்ரோ.

சூப்பரான கேமரா
புதிய ரெட்மி கே50எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் 200எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதாவது மோட்டோ நிறுவனம் சமீபத்தில் 200எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது.
ஆனால் அதற்குமுன்பே ரெட்மி நிறுவனம் 200எம்பி கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரெட்மி கே50எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் 200எம்பி கேமராவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரெட்மி கே50எஸ் ப்ரோ சிப்செட்
ரெட்மி கே50எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள அதே சிப்செட் வசதி தான் இந்த ரெட்மி கே50எஸ் ப்ரோ போனிலும் உள்ளது. அதாவது ஸ்னாப்டிராகன் 8 + ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் ரெட்மி கே50எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
புதிய ரெட்மி கே50எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் டூயல் ஸ்பீக்கர் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்ட் சார்ஜிங் வசதி
புதிய ரெட்மி கே50எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியை கொண்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக் அப் கிடைக்கும். அதேபோல் இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

ரெட்மி கே50எஸ் விலை
ரெட்மி கே50எஸ் மற்றும் ரெட்மி கே50எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த ரெட்மி கே50எஸ் ஸ்மார்ட்போன் ரூ.60,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ரெட்மி கே50எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. அதேபோல் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications