Redmi-யின் பவர்ஃபுல் போன் மீது பலே ஆபர்! இதுக்கு தானே வெயிட் பண்ணோம்!
நம்மில் பலரும், அடுத்த மாதம் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களின் மீது மட்டுமே கவனம் செலுத்துவோம். ஆனால் சிலர், கடந்த 3 மாதங்களில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள் மீது கவனம் செலுத்துவார்கள்!
ஏனெனில், அவர்களை பொறுத்தவரை, அடுத்த மாதம் வரும் மாடல்கள் மட்டுமே புதியவைகள் அல்ல, கடந்த சில மாதங்களில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள் கூட லேட்டஸ்ட் மாடல்கள் தான்!

அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என்றால்?
கடந்த ஜூலை 2022-இல் அறிமுகமான Redmi நிறுவனத்தின் மிகவும் சக்திவாந்த ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது அறிவிக்கப்பட்டுள்ள 2 வகையான ஆபர்களை பற்றி உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம்!
அதென்ன மாடல்? அதன் மீது என்னென்ன சலுகைகள் அணுக கிடைக்கிறது? இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? இதன் நிறை மற்றும் குறைகள் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

அந்த பவர்ஃபுல் ஆன Redmi ஸ்மார்ட்போன்!
நாம் இங்கே பேசும் "அந்த" பவர்ஃபுல் ஆன Redmi ஸ்மார்ட்போன் - இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அறிமுகமான Redmi K50i ஸ்மார்ட்போன் தான்!
மிட்-ரேன்ஜ் விலையில் ஒரு நல்ல பெர்ஃபார்மென்ஸ் ஸ்மார்ட்போனை அல்லது ஒரு தரமான கேமிங் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற தேடலில் உள்ள அனைவருமே ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போனை கவனத்தில் கொள்ள வேண்டும்!

அப்படிப்பட்ட Redmi K50i மீது திடீர் ஆபர்!
சியோமி நிறுவனம் (சத்தம் போடாமல்) அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக Redmi K50i மீது 2 வகையான சலுகைகளை பட்டியலிட்டுள்ளது!
முதல் சலுகை - பேங்க் கார்டு தள்ளுபடி ஆகும். இதன் கீழ் ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போனின் பட்டியலிடப்பட்ட விலையில் இருந்து சிறிது பணத்தை சேமிக்கலாம்.

உங்களிடம் ICICI பேங்க் கார்டு இருக்கிறதா?
உங்களிடம் ஐசிஐசிஐ பேங்க் கார்டு இருந்தால், முன்பணமாகவோ அல்லது இஎம்ஐ வழியாகவோ பணம் செலுத்தினால், உங்களுக்கு ரூ.3,000 என்கிற தள்ளுபடி கிடைக்கும். அதாவது இந்த கார்டு தள்ளுபடிக்கு பிறகு இந்த லேட்டஸ்ட் ரெட்மி ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.22,999 க்கு வாங்கலாம்.

இரண்டாவது ஆபர்!
இரண்டாவது சலுகை - கூப்பன் வடிவத்தில் கிடைக்கிறது, இதை பயன்படுத்தும் போது, நீங்கள் செக் அவுட் செய்யும் போது ஸ்மார்ட்போனின் விலையில் குறிப்பிட்ட அளவிலான தள்ளுபடி அணுக கிடைக்கும்.
ஆனால் இது சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும். அதாவது நிறுவனத்தின் இணையதளத்தில் மேற்க்குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் விலைக்குக் கீழே ரூ.500 என்கிற கூப்பனை சிலர் மட்டுமே காண்பார்கள்.

மொத்தம் ரூ.3500 ஆபர்!
அந்த கூப்பனை பயன்படுத்தும்போது, ஸ்மார்ட்போனின் விலையில் மேலும் ரூ.500-ஐ குறைக்கலாம். ஆக ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.22,499 க்கு வாங்கலாம். அதாவது மொத்தம் ரூ.3500 வரையிலான ஆபரை பெறலாம்!

யாரெல்லாம் Redmi K50i ஸ்மார்ட்போனை வாங்கலாம்?
- மலிவான விலையில் ஒரு நல்ல செயல்திறனை வழங்கும் ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால், இதை தாராளமாக வாங்கலாம்!
- ஹை ஃப்ரேம் ரேட்ஸில் மொபைல் கேம்களை விளையாட விரும்புகிறீர்கள் என்றால் நம்பி வாங்கலாம்!
- நல்ல பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட்போன் வேண்டும் என்றால், இதை கவனத்தில் கொள்ளலாம்.

யாரெல்லாம் Redmi K50i மாடலை வாங்கக்கூடாது?
- உங்களுக்கு OLED டிஸ்ப்ளே கொண்ட போன் தேவை என்றால் இதை வாங்க வேண்டாம். ஏனெனில் இது FFS LCD பேனலுடன் வருகிறது.
- உங்களுக்கு "தனித்து நிற்கும்" டிசைனை வழங்கும் ஒரு ஸ்மார்ட்போன் வேண்டும் என்றால், Redmi K50i-ஐ தவிர்க்கலாம். ஏனெனில் இது 2019-இல் வெளிவந்த Redmi K20 Pro போலல்லாமல், ஏற்கனவே வாங்க கிடைக்கும் பல ரெட்மி போன்களை போலவே தான் உள்ளது.
- க்ளோஸ்-டூ-ஸ்டாக் ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால், Redmi K50i மாடலை நீங்கள் 'ஸ்கிப்' செய்யலாம்!

Redmi K50i ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் :
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 சிப்செட்
- 8ஜிபி வரை LPDDR5 ரேம்
- 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட்
- 6.6-இன்ச் Full HD+ FFS டிஸ்ப்ளே
- டால்பி விஷன் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 ஓஎஸ்

கேமராக்கள், பேட்டரி எல்லாம் எப்படி?
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 64 மெகாபிக்சல் மெயின் சென்சார்
- 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா
- டிஸ்பிளேயில் பஞ்ச்-ஹோல் டிசைன்
- அதில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- எக்ஸ்-ஆக்சிஸ் வைப்பேர்ஷன் மோட்டார்
- 3.5மிமீ ஹெட்போன் ஜாக்
- 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
- 5080mAh பேட்டரி
- ஐபி53 ஸ்பிளாஷ்-ப்ரூஃப் மதிப்பீடு.


Click it and Unblock the Notifications