விரைவில்: தரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.!
ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ரெட்மி கே50 அல்ட்ரா

குறிப்பாக இந்த ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த ரெட்மி கே50 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 2கே ஒஎல்இடி பேனல் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனத்தில் டால்பி விஷன் ஆதரவும் உள்ளது.

அதேபோல் ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியுடன் வெளிவரும். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 100 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் மற்றும் பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்ந்நிறுவனம்
சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 11எஸ்இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11 எஸ்இ
ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளது.
ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியுடன் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும். அதேபோல் இந்த சாதனம் சிறந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். பின்பு இந்த சாதனம்
ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது.
ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றம் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். 5ஜி, டூயல் சிம் ஆதரவு, புளூடூத் வி5.1, டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications