2022-ல் முதல் ஸ்மார்ட்போன்., இந்தியாவின் அதிக சார்ஜிங் ஸ்மார்ட்போன்: ரெட்மி கே50 கேமிங் எடிஷன்!
ரெட்மி இந்த ஆண்டு பல ஸ்மார்ட்போன் அறிமுகங்களுக்கு தயாராகி வருகிறது. சியோமி ரெட்மி கே50 சீரிஸ் மூலம் இந்த ஆண்டை கிக்ஸ்டார்ட் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சமீபத்திய தகவலின்படி, ரெட்மி கே50 கேமிங் பதிப்பு சீன சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது. ரெட்மி கே 50 கேமிங் பதிப்பு ஸ்மார்ட்போனானது சீன 3சி பட்டியலால் காணப்பட்டது. இந்த சாதனத்தின் அம்சங்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

ரெட்மி கே50 கேமிங் பதிப்பு
ரெட்மி கே50 கேமிங் பதிப்பு விவரக்குறிப்புகள் வெளியிடப்பட்டது. சீன 3சி பட்டியலில் பேட்டரி மற்றும் சாதனத்தின் சார்ஜிங் திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் ரெட்மி கே50 ஸ்மார்ட்போனானது கேமிங் பதிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் வரவிருக்கும் ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல் எண் 21121210சி உடன் பவர் அடாப்டரை பேக் செய்வதாக சான்றிதழ் உறுதிப்படுத்தியுள்ளது.

120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு
மிக முக்கியமாக கூறப்படும் ரெட்மி கே50 கேமிங் பதிப்பு 120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் எனவும் இது பிரபல டிப்ஸ்டர் டிஜிட்டல் அரட்டை நிலையம் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உட்பட ரெட்மி கே50 கேமிங் பதிப்பின் விவரங்களை வெய்போ மூலம் உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. 3சி பட்டியல் வேறு எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ரெட்மி கே50 தொடரில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் குவால்காம் மற்றும் மீடியாடெக் என இரண்டு வெவ்வேறு வகை சிப்செட்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதோடு இதில் முன்பே நிறுவப்பட்ட எம்ஐயுஐ 13 உடன் வரும் என கூறப்படுகிறது.
அதேபோல் இரண்டு சாதனங்கள் மீடியாடெக் செயலியை பயன்படுத்தும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ரெட்மி கே50 தொடரில் நான்கு சாதனங்கள் இடம்பெறும் எனவும் அதில் இரண்டு மீடியாடெக் மூலம் இயக்கப்படும் எனவும் குவால்காம் செயலி மூலம் இரண்டு சாதனங்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி
அதேபோல் ரெட்மி கே50 ஸ்மார்ட்போனானது கேமிங் ஸ்டாண்டர்ட் எடிஷன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7000 சிப்செட் கொண்ட சாதனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் ரெட்மி கே50 ஸ்மார்ட்போன் தொழிற்சாலையில் நிறுவப்பட்ட MIUI 13 உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் எம்ஐயூஐ 13 என்பது ஆண்ட்ராய்டு 11 அல்லது ஆண்ட்ராய்டு 12-ஐ அடிப்படையாகக் கொண்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் சியோமி-ன் தலைவர் எம்ஐயூஐ 13 மூலம் இயக்கப்படும் என்பதை உறுதி செய்திருந்தார்.

அதிவேக சார்ஜிங் அம்சம்
முன்னதாக வெளியான தகவல்கள் குறித்து பார்க்கையில் அதன்படி வரவிருக்கும் சியோமியின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனை வேகமான சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகப்படுத்த உள்ளது. வெளியான தகவலின்படி ரெட்மி கே50 ஸ்மார்ட்போன் அதிவேக சார்ஜிங் அம்சத்தோடு வரும் என கூறப்படுகிறது. டிப்ஸடரில் இதன் காட்சி உள்ளிட்ட சில தகவல்கள் கசிந்துள்ளன.

1080 முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே
ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 செயலி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. இந்த புதிய ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் வரும் எனவும் இது 1080 முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வரும் எனவும் டிப்ஸ்டர் கூறப்படுகிறது. இது ரெட்மி கே50 அல்லது ரெட்மி கே40 தொடரின் புதிய சாதனமா இது இருக்கும் என டிப்ஸ்டர் தகவல் கூறுகிறது. ரெட்மி கே50 ஸ்மார்ட்போனானது 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் என தகவல் தெரிவிக்கிறது.
File Images


Click it and Unblock the Notifications








