இரண்டு அதுல., இரண்டு இதுல: பார்த்து பார்த்து வடிவமைக்கப்படும் ரெட்மி கே50- இப்படியும் இருக்கலாம்!

|

தொடர்ந்த ஸ்மார்ட்போன்களை பல்வேறு அம்சங்களோடு நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. ஸ்மார்ட்போன்களானது பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களோடு சாதனங்களை அறிமுகம் செய்கின்றன. அதற்கேற்ப ஸ்மார்ட்போன்களின் தேவையும் அதிகரித்து வருகின்றன. ஸ்மார்ட்போன்கள் நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டும் என எண்ணம் இருக்கும் பலருக்கு அதை பல மணிநேரம் சார்ஜ் செய்வதில் விருப்பம் இருப்பதில்லை. ரெட்மி கே50 தொடரில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் குவால்காம் மற்றும் மீடியாடெக் என இரண்டு வெவ்வேறு வகை சிப்செட்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதோடு இதில் முன்பே நிறுவப்பட்ட எம்ஐயுஐ 13 உடன் வரும் என கூறப்படுகிறது.

ரெட்மி கே50 ஸ்மார்ட்போன்

ரெட்மி கே50 ஸ்மார்ட்போன்

ரெட்மி சமீப காலமாக அதன் ரெட்மி கே50 தொடர் ஸ்மார்ட்போன்களில் உற்பத்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ரெட்மி கே50 ஸ்மார்ட்போனானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். தற்போதைய அறிவிப்பின் படி ரெட்மி கே50 தொடர் ஸ்மார்ட்போன்கள் இரண்டு வெவ்வேறு சிப்செட்கள் மூலம் இயக்கப்படும் என டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல் இரண்டு சாதனங்கள் மீடியாடெக் செயலியை பயன்படுத்தும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ரெட்மி கே50 தொடரில் நான்கு சாதனங்கள் இடம்பெறும் எனவும் அதில் இரண்டு மீடியாடெக் மூலம் இயக்கப்படும் எனவும் குவால்காம் செயலி மூலம் இரண்டு சாதனங்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய MIUI 13 உடன் வரும்

சமீபத்திய MIUI 13 உடன் வரும்

ரெட்மி கே50 சீரிஸ்-ல் உள்ள நான்கு சாதனங்களும் முன்பே நிறுவப்பட்ட சமீபத்திய MIUI 13 உடன் வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கே50 தொடரின் சாதனங்களில் மீடியாடெக்கின் இரண்டு செயலிகள் Dimensity 7000 மற்றும் Dimensity 9000 இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சிப்செட்கள் மற்றும் எம்ஐயூஐ 13 இடம்பெறும் என்பது யூகங்களே ஆகும். டிப்ஸ்டரின் சமீபத்திய அறிக்கைப்படி, வரவிருக்கும் ரெட்மி கே50 தொடரின் நான்கு சாதனங்களின் செயலிகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. சாதனங்கள் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி உடன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஸ்னாப்டிராகன் 8 ஜென்1 எஸ்ஓசி என்பது சமீபத்திய சிப்செட் ஆகவும் கருதப்படுகிறது. அதேபோல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மீடியாடெக் டைமண்சிட்டி 9000 மற்றும் தற்போதுவரை அறிமுகம் செய்யப்படாது டைமண்சிட்டி 7000 எஸ்ஓசி உடன் வரும் என ஊகிக்கப்படுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் மீடியாடெக் சிப்செட்களை காட்டிலும் குவால்காம் செயலிகளை கொண்ட ஸ்மார்ட்போன்கள் வேகமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மீடியாடெக் டைமன்சிட்டி 7000 சிப்செட்

மீடியாடெக் டைமன்சிட்டி 7000 சிப்செட்

அதேபோல் ரெட்மி கே50 ஸ்மார்ட்போனானது கேமிங் ஸ்டாண்டர்ட் எடிஷன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7000 சிப்செட் கொண்ட சாதனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் ரெட்மி கே50 ஸ்மார்ட்போன் தொழிற்சாலையில் நிறுவப்பட்ட MIUI 13 உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் எம்ஐயூஐ 13 என்பது ஆண்ட்ராய்டு 11 அல்லது ஆண்ட்ராய்டு 12-ஐ அடிப்படையாகக் கொண்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் சியோமி-ன் தலைவர் எம்ஐயூஐ 13 மூலம் இயக்கப்படும் என்பதை உறுதி செய்திருந்தார்.

முன்னதாக வெளியான தகவல்கள்

முன்னதாக வெளியான தகவல்கள்

முன்னதாக வெளியான தகவல்கள் குறித்து பார்க்கையில் அதன்படி வரவிருக்கும் சியோமியின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனை வேகமான சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகப்படுத்த உள்ளது. வெளியான தகவலின்படி ரெட்மி கே50 ஸ்மார்ட்போன் அதிவேக சார்ஜிங் அம்சத்தோடு வரும் என கூறப்படுகிறது. டிப்ஸடரில் இதன் காட்சி உள்ளிட்ட சில தகவல்கள் கசிந்துள்ளன.

ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 செயலி

ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 செயலி

ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 செயலி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. இந்த புதிய ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் வரும் எனவும் இது 1080 முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வரும் எனவும் டிப்ஸ்டர் கூறப்படுகிறது. இது ரெட்மி கே50 அல்லது ரெட்மி கே40 தொடரின் புதிய சாதனமா இது இருக்கும் என டிப்ஸ்டர் தகவல் கூறுகிறது. ரெட்மி கே50 ஸ்மார்ட்போனானது 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் என தகவல் தெரிவிக்கிறது.

புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் விவரங்கள்

புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் விவரங்கள்

டிப்ஸ்டர் மூலம் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐபி68 மதிப்பீடு உடன் இருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதேபோல் கசிவுத் தகவலின்படி ரெட்மி கே50 சீரிஸ் ஸ்மார்ட்போன் 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் என தெரிவிக்கிறது. இந்த தகவலின்படி இருக்கும் பட்சத்தில், சியோமி ஃபிளாக்ஷிப் எம்ஐ மாடல்கள் மற்றும் பிளாக் ஷார்க் கேமிங் போன்களில் மட்டுமே இந்த அளவு வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் ரெட்மி கே 50 ஸ்மார்ட்போனானது நீர் மற்றும் தூசி எதிர்ப்புக்கு என ஐபி68 தரத்துடன் வரும் கசிவு தகவல்கள் தெரிவிக்கிறது. இது இயர்பீஸ் மற்றும் லோயர் ஃபயரிங் ஸ்பீக்கருக்கு பதிலாக சமச்சீர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆதரவு

நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆதரவு

வரவிருக்கும் ரெட்மி கே 50 ஸ்மார்ட்போனானது நீர் மற்றும் தூசி எதிர்ப்புக்கு என ஐபி68 தரத்துடன் வரும் கசிவு தகவல்கள் தெரிவிக்கிறது. இது இயர்பீஸ் மற்றும் லோயர் ஃபயரிங் ஸ்பீக்கருக்கு பதிலாக சமச்சீர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இருக்கும் என கூறப்படுகிறது. டாப் எண்ட் மாடலான இந்த ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா இருக்கும் எனவும் பிற மாடல்களில் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ரெட்மி கே 50 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக சந்தையில் அறிமுகம் குறித்து எந்த தகவலும் மறுபெயரிட்ட பதிப்பாகவும் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi K50 Series Smartphones Might Launching With Qualcom and Mediatek Chipset

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X