ரெட்மி கே50 ரெண்டர்கள்: மூன்று கேமரா, 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு- வேற லெவல் கேமிங் அனுபவம்!
ரெட்மி கே50 ஸ்மார்ட்போன் ரெண்டர்கள் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மூன்று கேமராக்கள், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி உடன் பேக் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ரெட்மி கே50 ஸ்மார்ட்போன்
ரெட்மி கே50 ஸ்மார்ட்போனானது கேமிங் பதிப்பு முதன்மையாக இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி கே50 தொடரில் ரெட்மி கே50, ரெட்மி கே50 ப்ரோ மற்றும் ரெட்மி கே50 ப்ரோ ப்ளஸ் ஆகிய மூன்று மாடல்கள் இடம்பெறும் என தகவல்கள் கூறுகிறது. ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் ரெட்மி கே50 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. ரெட்மி கே50 ரெண்டர்கள் பிரபல டிப்ஸ்டர் ஆன்லீக்ஸ் உடன் இணைந்து பெஸ்டோபீடியா வெண்ணிலா ரெட்மி கே50 ரெண்டர்களை வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. ரெண்டர்களின் படி, வரவிருக்கும் கே50 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் இருக்கும் என கூறப்படுகிறது. ரெண்டர்கள் படி இந்த ஸ்மார்ட்போனின் இடது பக்கம் வெறுமையாக இருக்கும் என குறிப்பிடுகிறது.

ஸ்மார்ட்போனின் மேற்புறத்தில் ஸ்பீக்கர் கிரில்
அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் மேற்புறத்தில் ஸ்பீக்கர் கிரில் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்டபோனானது யூஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் மற்றும் முதன்மை மைக்ரோஃபோன் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

6.6 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே
அதேபோல் வதந்தித் தகவலின்படி, ரெட்மி கே50 ஆனது 6.6 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் இதை சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம் பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பிற விவரக்குறிப்புகள் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அறிக்கைத் தகவலின்படி, ரெட்மி கே50 ஸ்மார்ட்போனானது ரூ.25,000 மற்றும் ரூ.30,000 விலையில் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்
ரெட்மி கே50 கேமிங் பதிப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரெட்மி ஸ்மார்ட்போனின் விலை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய விலைப்படி ரூ.39,040 ஆக இருக்கும் எனவும் அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் இந்திய விலை மதிப்புப்படி ரூ.42,605 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண் விலை ரூ.46,145 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி கே50 ஸ்மார்ட்போன் ரெண்டர்கள் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மூன்று கேமராக்கள், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது. கேமிங்கை மையாகக் கொண்ட ரெட்மி போனானது 120 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது.
File Images


Click it and Unblock the Notifications