வேகம் அப்படி இருக்கும்- 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறதா ரெட்மி கே50?
தொடர்ந்த ஸ்மார்ட்போன்களை பல்வேறு அம்சங்களோடு நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. ஸ்மார்ட்போன்களானது பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களோடு சாதனங்களை அறிமுகம் செய்கின்றன. அதற்கேற்ப ஸ்மார்ட்போன்களின் தேவையும் அதிகரித்து வருகின்றன. ஸ்மார்ட்போன்கள் நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டும் என எண்ணம் இருக்கும் பலருக்கு அதை பல மணிநேரம் சார்ஜ் செய்வதில் விருப்பம் இருப்பதில்லை.

புதிய ரெட்மி ஸ்மார்ட்போனை்
அதன்படி வரவிருக்கும் சியோமியின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனை வேகமான சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகப்படுத்த உள்ளது. வெளியான தகவலின்படி ரெட்மி கே50 ஸ்மார்ட்போன் அதிவேக சார்ஜிங் அம்சத்தோடு வரும் என கூறப்படுகிறது. டிப்ஸடரில் இதன் காட்சி உள்ளிட்ட சில தகவல்கள் கசிந்துள்ளன.

100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 செயலி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. இந்த புதிய ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் வரும் எனவும் இது 1080 முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வரும் எனவும் டிப்ஸ்டர் கூறப்படுகிறது. இது ரெட்மி கே50 அல்லது ரெட்மி கே40 தொடரின் புதிய சாதனமா இது இருக்கும் என டிப்ஸ்டர் தகவல் கூறுகிறது. ரெட்மி கே50 ஸ்மார்ட்போனானது 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் என தகவல் தெரிவிக்கிறது.

ஐபி68 மதிப்பீடு அம்சம்
டிப்ஸ்டர் மூலம் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐபி68 மதிப்பீடு உடன் இருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதேபோல் கசிவுத் தகவலின்படி ரெட்மி கே50 சீரிஸ் ஸ்மார்ட்போன் 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் என தெரிவிக்கிறது. இந்த தகவலின்படி இருக்கும் பட்சத்தில், சியோமி ஃபிளாக்ஷிப் எம்ஐ மாடல்கள் மற்றும் பிளாக் ஷார்க் கேமிங் போன்களில் மட்டுமே இந்த அளவு வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீர் மற்றும் தூசி எதிர்ப்பு
வரவிருக்கும் ரெட்மி கே 50 ஸ்மார்ட்போனானது நீர் மற்றும் தூசி எதிர்ப்புக்கு என ஐபி68 தரத்துடன் வரும் கசிவு தகவல்கள் தெரிவிக்கிறது. இது இயர்பீஸ் மற்றும் லோயர் ஃபயரிங் ஸ்பீக்கருக்கு பதிலாக சமச்சீர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

67 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு
அதேபோல் ரெட்மி கே 40 ஸ்மார்ட்போனானது சிறந்த தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பு ஐபி 53 மதிப்பீட்டைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த சாதனத்தில் 67 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் ரெட்மி கே 50 தொடர் சாதனத்தில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம், வெளியான தகவலின்படி ரெட்மி கே 50 சீரிஸ் சாதனத்தில் மூன்று ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதன் உயர்நிலை ஸ்மார்ட்போனில் முதன்மை செயலி குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும். இந்த தொடரில் இருக்கும் குறைந்த விலை மாறுபாட்டு ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இவை அனைத்தும் தகவல்களே என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று மாடல்கள் இடம்பெறும்
ரெட்மி கே 50 ஸ்மார்ட்போனில் மூன்று சாதனங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. ரெட்மி கே50 ஸ்மார்ட்போனில் 100 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. இது முதன்மை சாதனங்களில் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பிற சாதனம் 67 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவையும் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

டாப் எண்ட் மாடல்
டாப் எண்ட் மாடலான இந்த ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா இருக்கும் எனவும் பிற மாடல்களில் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ரெட்மி கே 50 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக சந்தையில் அறிமுகம் குறித்து எந்த தகவலும் மறுபெயரிட்ட பதிப்பாகவும் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications