புதிய Redmi K50 Extreme Edition போனுக்காக தாராளமாக வெயிட் பண்ணலாம்: அப்படி என்ன ஸ்பெஷல்?

|

ரெட்மி நிறுவனம் கடந்த மாதம் ரெட்மி கே50ஐ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனுக்கு தற்போது இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ரெட்மி கே50 Extreme Edition

ரெட்மி கே50 Extreme Edition

இந்நிலையில் ரெட்மி கே50 Extreme Edition ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி நிறுவனம்.ஆன்லைனில் வெளிவந்ததகவலின்படி இந்த மாதம் இறுதியில் ரெட்மி கே50 Extreme Edition ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வக வடிவ பகடை, பாசிமணிகள்: யானை தந்தத்தால் உருவாக்கப்பட்டதாம்!கீழடியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வக வடிவ பகடை, பாசிமணிகள்: யானை தந்தத்தால் உருவாக்கப்பட்டதாம்!

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

புதிய ரெட்மி கே50 Extreme Edition ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 + ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.
எனவே வீடியோ எடிட்டிங், கேமிங் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிகவும் அருமையாக உதவும்.

அதேபோல் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலோன் மஸ்க் போட்ட ஸ்கெட்ச்.. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான திட்டம் இது தானா? வீடியோ இதோ..எலோன் மஸ்க் போட்ட ஸ்கெட்ச்.. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான திட்டம் இது தானா? வீடியோ இதோ..

சூப்பரான டிஸ்பிளே

சூப்பரான டிஸ்பிளே

புதிய ரெட்மி கே50 Extreme Edition ஸ்மார்ட்போன் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும்.120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ். 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் Extreme Editionஅறிமுகமாகும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி குறித்து யாரும் அறியாத 7 விஷயங்கள்- நம்பமுடியாத உண்மைகள்!ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி குறித்து யாரும் அறியாத 7 விஷயங்கள்- நம்பமுடியாத உண்மைகள்!

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

குறிப்பாக 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே50 Extreme Edition ஸ்மார்ட்போன். பின்பு தரமான பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி 10ஏ ஸ்போர்ட் (Redmi 10A Sport) ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

உங்கள் ஸ்மார்ட்போனை டிவி ரிமோட்டாகவும் பயன்படுத்துவது எப்படி? ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு டிப்ஸ்..உங்கள் ஸ்மார்ட்போனை டிவி ரிமோட்டாகவும் பயன்படுத்துவது எப்படி? ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு டிப்ஸ்..

ரெட்மி 10ஏ ஸ்போர்ட்

ரெட்மி 10ஏ ஸ்போர்ட்

ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் வாட்டர்-டிராப் நாட்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டு வெளிவந்துள்ளது. 1600 x 720 பிக்சல்ஸ், 20:9 ரேஷியோ, 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்ற அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

பைக் விபத்தில் சுயநினைவை இழந்து மயங்கிய நபர்: கடவுள் மாதிரி உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்- எப்படி தெரியுமா?பைக் விபத்தில் சுயநினைவை இழந்து மயங்கிய நபர்: கடவுள் மாதிரி உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்- எப்படி தெரியுமா?

 ரெட்மி 10ஏ ஸ்போர்ட் சிப்செட் எப்படி?

ரெட்மி 10ஏ ஸ்போர்ட் சிப்செட் எப்படி?

மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி 10ஏ ஸ்போர்ட் மாடல். எனவே இதை பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும். குறிப்பாக ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன்.

40 ஸ்பேஸ்எக்ஸ் Starlink சாட்டிலைட்கள் புவி காந்த புயலால் சேதம்.. மொத்தம் 12,000 சாட்டிலைட்களை ஏவ திட்டமா?40 ஸ்பேஸ்எக்ஸ் Starlink சாட்டிலைட்கள் புவி காந்த புயலால் சேதம்.. மொத்தம் 12,000 சாட்டிலைட்களை ஏவ திட்டமா?

 13எம்பி ரியர் கேமரா

13எம்பி ரியர் கேமரா

ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி ரியர் கேமரா (f2.2 aperture) ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன்அருமையான படங்களை எடுக்க முடியும்.

பின்பு டூயல் சிம், 4ஜி, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10ஏ ஸ்போர்ட்ஸ்மார்ட்போன்.

BSNL அறிமுகம் செய்த புதிய பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்கள்.. ரூ.200க்குள் மூன்று திட்டம்-இதில் பெஸ்ட் எது?BSNL அறிமுகம் செய்த புதிய பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்கள்.. ரூ.200க்குள் மூன்று திட்டம்-இதில் பெஸ்ட் எது?

ரெட்மி 10ஏ ஸ்போர்ட் விலை?

ரெட்மி 10ஏ ஸ்போர்ட் விலை?

ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டபல சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த போன் சார்கோல் பிளாக், ஸ்லேட் கிரே மற்றும் சீ ப்ளூ நிறங்களில் கிடைக்கும்.

குறிப்பாக ரூ.10,999-விலையில் இந்த ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

அதேபோல் விரைவில் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் ரெட்மி நிறுவனம் 5ஜி ஸமார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக தற்போது இந்திய சந்தையில் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Redmi K50 Extreme Edition will be launched later this month: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X