Home
Mobile

ஸ்னாப்டிராகன் 870 சிப்செட், 48எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரெட்மி கே40எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

ரெட்மி நிறுவனம் நேற்று ரெட்மி கே40எஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அருமையான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. அதேபோல் ரெட்மி கே40எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

ட்மி கே40எஸ் ஸ்மார்ட்போன்

ரெட்மி கே40எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Samsung E4 AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய
ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 ரெட்மி கே40எஸ் ஸ்மார்ட்போனில் 7என்எ

இந்த ரெட்மி கே40எஸ் ஸ்மார்ட்போனில் 7என்எம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக
இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 13 ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரெட்மி கே40எஸ் ஸ்மார்ட்போனில்

புதிய ரெட்மி கே40எஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரெட்மி கே40எஸ்

ரெட்மி கே40எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி Sony IMX582 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக்கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4500 எம்ஏஎச் பேட்டரி

இந்த ரெட்மி கே40எஸ் ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 67 பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல்வேறு சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2,

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, என்எப்சி, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு அதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். பின்பு இந்த சாதனத்தின் எடை 195கிராம் ஆகும். அதேபோல் இந்த ரெட்மி கே40எஸ் ஸ்மார்ட்போனின்ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.21,500-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi K40S With Snapdragon 870 SoC Launched: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X