ரெட்மி கே 40 மற்றும் ரெட்மி கே 40 ப்ரோ 25ம் தேதி அறிமுகமா? என்ன ஸ்பெஷல் இருக்கு இதில்..

|

ரெட்மி நிறுவனம் வரும் பிப்ரவரி மாதம் 25ம் தேதி புதிய ரெட்மி கே 40 ஸ்மார்ட்போன் மற்றும் ரெட்மி கே 40 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இதன் கீக்பெஞ்ச் ஸ்கோரிங் தகவலுடன் இதன் முக்கிய சிறப்பம்ச விபரங்களும் தற்பொழுது வெளியாகியுள்ளது.

ரெட்மி கே 40 மற்றும் ரெட்மி கே 40 ப்ரோ 25ம் தேதி அறிமுகமா?என்ன ஸ்பெஷல்

இந்த புதிய ஸ்மார்ட்போன் சாம்சங் E4 அமோலேட் டிஸ்பிளேயுடன் 120Hz புதுப்பிப்பு விதம் உடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் கட் வடிவமைப்பைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்துடன் வெளிவரும். இது alioth என்ற கோடு பெயர் கொண்ட ஸ்னாப் டிராகன் 870 சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப் டிராகன் 888 சிப்செட் உடன் வெளிவர வாய்ப்புள்ளது என்று மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது. இந்த ரெட்மி கே 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 8ஜிபி ரேம் உடன் 256 ஜிபி யுஎப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் விருப்பத்துடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

கேமராவை பொறுத்த வரை ரெட்மி கே 40 ப்ரோ ஸ்மார்ட்போன் 108 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், ரெட்மி கே 40 ஸ்மார்ட்போன் 64 மெகா பிக்சல் கொண்ட கேமராவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டிருக்கும்.

கீக்பெஞ்ச் பட்டியலில் ரெட்மி கே 40 ஸ்மார்ட்போன் சிங்கள் கோர் டெஸ்டிங்கில் 1016 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அதேபோல், மல்டி கோர் டெஸ்டிங்கில் 3332 மதிப்பெண்களை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Redmi K40 spotted at Geekbench : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X