ரேம் பவரே 12ஜிபினா வேற அம்சத்த சொல்லவா வேணும்: ரெட்மி கே40 அறிமுகம்- விலை என்ன தெரியுமா?

|

ரெட்மி கே 40 ஸ்மார்ட்போன் முதன்மை ரக அம்சங்களோடு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே40 ஸ்மார்ட்போன் உலகளவில் போக்கோ தொலைபேசியாக வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ரெட்மி கே40 சிறப்பம்சங்கள்

ரெட்மி கே40 சிறப்பம்சங்கள்

ரெட்மி கே40 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. 360 ஹெர்ட்ஸ் டச் மாதிரி, 1300 நிட்ஸ் உச்சநிலை பிராகசம், பாதுகாப்பு அம்சத்திற்கு கொரில்லா கிளாஸ் 5, 6.67 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 செயலி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 செயலி

இந்த ஸ்மார்ட்போன் அட்ரினோ 650 ஜிபியு உடன் ஜோடியாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 மூலம் இயக்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் 128 ஜிபி உள்சேமிப்பு, 8 ஜிபி ரேம் 256 ஜிபி உள்சேமிப்பு, 12 ஜிபி ரேம் 256 ஜிபி உள்சேமிப்பு ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கும்.

ரெட்மி கே40, ரெட்மி கே 40 ப்ரோ, ரெட்மி கே 40 ப்ரோ ப்ளஸ்

ரெட்மி கே40, ரெட்மி கே 40 ப்ரோ, ரெட்மி கே 40 ப்ரோ ப்ளஸ்

ரெட்மி கே 40 ஸ்மார்ட்போனில் ரெட்மி கே40, ரெட்மி கே 40 ப்ரோ, ரெட்மி கே 40 ப்ரோ ப்ளஸ் சாதனங்கள் இடம்பெறுகிறது. ரெட்மி கே 40 அடிப்படை மாடலாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை இந்திய மதிப்புப்படி ரூ.22,500 ஆக இருக்கிறது. அதேபோல் ரெட்மி கே 40 ப்ரோ ஆரம்ப விலை மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

எப்போது விற்பனை

எப்போது விற்பனை

ரெட்மி கே 40 மற்றும் ரெட்மி கே 40 ப்ரோ மார்ச் 4 ஆம் தேதி முதல் சீனாவில் கிடைக்கும் எனவும் ரெட்மி கே 40 ப்ரோ ப்ளஸ் மார்ச் இறுதிக்குள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் உலகளவில் கிடைக்கும் விவரங்கள் தெரியவில்லை.

48 எம்பி பிரதான கேமரா

48 எம்பி பிரதான கேமரா

இந்த ஸ்மார்ட்போன் 48 எம்பி கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 5 எம்பி மூன்றாம் நிலை கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 20 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரெட்மி கே40 ஸ்மார்ட்போன் 4520 எம்ஏஎச் பேட்டரி 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவை கொண்டுள்ளது. டால்பி அட்மாஸ் அம்சத்தோடு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இதில் இருக்கிறது.

உலகளவில் போக்கோ சாதனமாக வெளியாகும் என தகவல்

சியோமியின் துணை பிராண்டான ரெட்மி முதன்மை ரக அம்சங்களோடு ரெட்மி கே40 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய சாதனம் உலகளவில் போக்கோ ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi K40 Smartphone Launched With 12Gb RAM, 20 Mp Selfie Camera and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X