இன்றே வெளியீடு: மிகவும் எதிர்பார்த்த ரெட்மி கே40 சீரிஸ்- எல்லாமே உயர்தர அம்சங்களா?

|

சியோமி நிறுவனம் புதிய ரெட்மி கே40 சீரிஸ் இன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரெட்மி கே40 தொடரில் ரெட்மி கே40 ப்ரோ, ரெட்மி கே40 ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்றால் அது உலகின் மிகச்சிறய செல்பி கேமரா கட்அவுட்டுன் வரும் என்பதுதான்.

ரெட்மி கே40 சீரிஸ்

ரெட்மி கே40 சீரிஸ்

ரெட்மி கே40 சீரிஸ்-ல் சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி செயலி இடம்பெறுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் புதிப்பிப்பு வீத டிஸ்ப்ளே, இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த தொடர் ஸ்மார்ட்போன்களுடன் சியோமி லேப்டாப் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி கே40 சீரிஸ் விலை

ரெட்மி கே40 சீரிஸ் விலை

ரெட்மி கே40 சீரிஸ் விலை குறித்து பார்க்கையில், இந்த ரெட்மி கே 40 ஸ்மார்ட்போன் சிஎன்ஒய் 2,999 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ.33,600 என்ற தொடக்க விலையாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 2020 மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே30 தொடரின் வாரிசாக கருதப்படுகிறது.

இன்று வெளியீடு நேரலை ஒளிபரப்பு

இன்று வெளியீடு நேரலை ஒளிபரப்பு

ரெட்மி கே 40 சீரிஸ் வெளியீடு இரவு 7:30 மணி சிஎஸ்டி, மாலை 5 மணி ஐஎஸ்டி நேரத்தில் நடக்க இருக்கிறது. இந்த ரெட்மி கே40 சீரிஸ் வெளியீடு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இந்த வெளியீடு நிகழ்வு எம்ஐ.காம் வலைதளத்தில் மூலம் பார்க்கலாம்.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

ரெட்மி கே 40 சீரிஸ்-ல் ரெட்மி கே40 ப்ரோ, ரெட்மி கே 40 ஆகிய மாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெய்போ வெளியிட்ட சியோமி குறித்த தகவலின்படி, ரெட்மி கே40 தொடரில் சாம்சங் இ4 அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே ஆகியவை இருக்கும் என கூறப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி

டீசர் தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் 4520 எம்ஏஎச் பேட்டரி, இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் சவுண்ட் ஆகியவை இருக்கிறது. இதில் சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி செயலி இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூன்று பின்புற கேமராக்கள்

மூன்று பின்புற கேமராக்கள்

இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்கள் இருக்கும் என்பதை மற்றொரு டீசர் படம் தெரிவிக்கிறது. இது 6.67 இன்ச் டிஸ்ப்ளேக்கள், 5ஜி 4ஜி இணைப்பு ஆதரவுகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதை அறிமுகம் செய்யும்போது நிறுவனம் லேப்டாப் மாடல்களையும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi K40 Series Set to Launch Today: Here the Details How to Watch LiveStream

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X