Home
Mobile

ரெட்மி கே40 அம்சங்கள் இதுதானா?- 108 எம்பி கேமரா, ஆண்ட்ராய்டு 11 ஆதரவு!

ரெட்மி கே40 ஸ்மார்ட்போன்கள் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவுடன் வெளியாகும் எனவும் இதன் முன்புறத்தில் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு வரும் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரெட்மி கே40 அம்சங்கள் இதுதானா?- 108 எம்பி கேமரா, ஆண்ட்ராய்டு 11 ஆதரவு!

சாம்சங் இ4 அமோலெட் டிஸ்ப்ளேவுடன் ரெட்மி கே40 மற்றும் ரெட்மி கே40 ப்ரோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 25 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளது.

நிறுவனம் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு குறித்த படத்தை வெளியிட்டுள்ளது. இதன் பின்புற வலது பக்கத்தில் எல்இடி பிளாஷ் இருக்கிறது. ஸ்மார்ட்போன் பின்புறத்தில் நீர்வடிவ கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. ரெட்மி கே 40 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவுடன் வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பஞ்ச் ஹோல் வடிவமைப்பை கொண்டிருக்கும் எனவும் 4000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 888 மூலம் இயக்கப்படும் எனவும் டைமன்சிட்டி 1200 சிப்செட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

ரெட்மி கே 40 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவுடன் வரும் எனவும் 108 எம்பி பிரதான கேமரா, 64 எம்பி இரண்டாம் நிலை கேமரா கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மதிப்பு இந்திய விலைப்படி ரூ.33,993 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi K40 Series May Launching with this Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X