Home
Mobile

64எம்பி கேமராவுடன் வெளிவரும் அசத்தலான ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன்.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம், அதன் அடுத்த புதிய ஸ்மார்ட்போனாக ரெட்மி கே30எஸ் மாடல் வெளியாகும் என்பதையும், அது சீனாவில் வருகிறது அக்டோபர் 27-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பதையும் உறுதி செய்துள்ளது.

விருப்பங்களில் வ

ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது முன்னதாக வெளியான சியோமி மி 10டி ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சீன சமூக ஊடகத்தளமான வெய்போ வழியாக வெளியான போஸ்டர்களின்படி, ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு மற்றும் வெள்ளி வண்ண விருப்பங்களில் வரும்.

ரெட்மி கே30எஸ்

ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் எல்.ஈ.டி ஃபிளாஷ் கொண்ட செவ்வக வடிவிலான ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் 6.67 இன்ச் அளவிலான ஐபிஎஸ் எல்சிடி எஃப்எச்டி + டிஸ்ப்ளேவை 144 ஹெர்ட்ஸ் என்கிற ரெஃப்ரெஷ் ரேட் உடன் கொண்டிருக்கும் இந்த ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

ட்மி கே30எஸ் ஸ்மார்ட்போனில்

இந்த ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ரீடர் இருக்கும். மேலும் இது 5 ஜி நெட்வொர்க்குகளுக்கான ஆதரவுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும்.

ரெட்மி கே30எஸ் சாதனத்தில்

ரெட்மி கே30எஸ் சாதனத்தில் 12 ஜிபி எல்பிபிடிஆர் 5 ரேம் மற்றும் 512 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் இருக்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமையை MIUI 12 ஸ்கின் உடன் இயங்கும். குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ரெட்மி கே30எஸ்

வெளிவந்த தகவலின்படி, ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தில் ஒரு 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறும்.

சியோமி மி 10டி அம்சங்கள்

சியோமி மி 10டி அம்சங்கள்

சியோமி மி 10டி ஸ்மார்ட்போன் ஆனது 6.67இன்ச் அளவிலான புல் எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே, 20: 9 என்கிற திரை விகிதம், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC மூலம் இயக்கப்படுகிறது.

மி 10டி ஸ்மார்ட்போன் ஒரு ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் மேக்ரோ லென்ஸுடன் 5 மெகாபிக்சல் சென்சார் ஆகியவைகள் உள்ளன. முன்புறத்தில், ஹோல்-பஞ்ச் கட் அவுட்டில் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சாதனத்தில்33W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி உள்ளது. கடைசியாக, இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 165.1x76.4x9.33 மிமீ மற்றும் 216 கிராம் எடையும் கொண்டுள்ளது.

சியோமி மி 10டி விலை

சியோமி மி 10டி விலை

மி 10டி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ஆனது இந்தியாவில் ரூ.35,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. மறுகையில் உள்ள 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.37,999 க்கு அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக் மற்றும் லூனார் சில்வர் வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Redmi K30S to be announced on October 27 and More Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X