Home
Mobile

64எம்பி கேமராவுடன் ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் வெளிவந்துள்ளது.

ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச்

ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 144Hz refresh rate, எச்டிஆர் 10 பிளஸ் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு அட்ரினோ 650 ஜிபியு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்மார்ட்போனின் 64எம்பி பிரைமரி லென்ஸ்

ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போனின் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. 5ஜி, வைஃபை 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.1, டூயல் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

இந்திய மதிப்பில்..
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,000-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,810-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K30S Launched: Specs, Features and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X