அக்டோபர் 27 ஆம் தேதி அறிமுகமாகும் ரெட்மி கே30எஸ்: விலை, அம்சங்கள்!

|

ரெட்மி கே 30 எஸ் ஸ்மார்ட்போன் செவ்வக வடிவ டிரிபிள் கேமரா அமைப்பு, கருப்பு மற்றும் சில்வர் வண்ண விருப்பங்களில் அக்டோபர் 27 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது.

ரெட்மி கே 30எஸ் ஸ்மார்ட்போன்

ரெட்மி கே 30எஸ் ஸ்மார்ட்போன்

சியோமி, ரெட்மி கே 30எஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. ரெட்மி கே 30 எஸ் ஸ்மார்ட்போன் சியோமி எம்ஐ 10 டி மாடலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ்

64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ்

வெய்போவின் தகவலின்படி, ரெட்மி கே 30 எஸ் கருப்பு மற்றும் சில்வர் வண்ண விருப்பங்களில் வரும். இது 64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட செவ்வக வடிவ டிரிபிள் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

6.67 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளே

6.67 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளே

முந்தைய தகவல்களின்படி, ரெட்மி கே 30 எஸ் 6.67 அங்குல ஐபிஎஸ் எல்சிடி முழு எச்டி+ டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் பாதுகாப்பு அம்சத்துக்கு இருக்கிறது. இது 5ஜி ஆதரவுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 செயலி மூலம் இயக்கப்படும்.

5,000எம்ஏஎச் பேட்டரி

5,000எம்ஏஎச் பேட்டரி

ஸ்மார்ட்போனில் 12 ஜிபி எல்பிபிடிஆர்5 ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பு இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. 5,000எம்ஏஎச் பேட்டரி மற்றும் அதை சார்ஜ் செய்ய 33W வேகமான சார்ஜிங் அம்சம் உள்ளது.

20 மெகாபிக்சல் செல்பி கேமரா

20 மெகாபிக்சல் செல்பி கேமரா

ரெட்மி கே 30 எஸ் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதோடு முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கும்.

file images

source: gsmarena.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi K30s Going to Launch on October 27: Here the details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X