64எம்பி கேமராவுடன் அசத்தலான ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் அறிமுகம்.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தேதியை அந்நிறுவனம் குறிப்பிடவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களைப் பார்ப்போம்.

சூப்பர் AMOLED டிஸ்பிளே
ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியு இந்த ஸ்மார்ட்போனில் அடக்கம்.

ஸ்னாப்டிராகன் 865 5ஜி பிராசஸர்
இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 5ஜி பிராசஸர் உடன் அட்ரினோ 650ஜிபியு வசதி அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் +13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்க பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி பாப்-அப் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் ஸ்மார்ட்போனில் 4700எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

வைஃபை 802.11, புளூடூத் 5.1, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், டூயல் சிம், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 218கிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.47,900-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications