அல்டிமேட் அம்சங்கள் மற்றும் லுக்: இன்று அறிமுகமாகிறது Redmi k30 pro!

|

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி இன்று ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதிநவீன தொழில்நுட்ப வசதி

அதிநவீன தொழில்நுட்ப வசதி

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவர இருக்கிறது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன்

ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன்

குறிப்பாக இந்த ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அன்மையில் வெளிவந்த ஒன்பிளஸ் மாடல்களுக்கு போட்டியாக வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரெட்மி கே30 ப்ரோ சாதனமானது விலை சற்று அதிகமாகவே இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மதிப்பில் ரூ.32,200

இந்திய மதிப்பில் ரூ.32,200

ரெட்மி கே 30 ப்ரோ போனானது சீன யுவான் மதிப்புக்கு 3,299 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனானது இந்திய மதிப்பில் ரூ.32,200 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம்.

865எஸ்ஒசி சிப்செட் வசதி

865எஸ்ஒசி சிப்செட் வசதி

ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

நல்ல மனசு அது இதுதான்.! கொரோனாவால வேலை போச்சா.! நாங்க வேலை தாரோம்.! அமேசான் அசத்தல்..!நல்ல மனசு அது இதுதான்.! கொரோனாவால வேலை போச்சா.! நாங்க வேலை தாரோம்.! அமேசான் அசத்தல்..!

32எம்பி செல்பீ கேமரா

32எம்பி செல்பீ கேமரா

ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்

ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்

ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

33வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு

33வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு

குறிப்பாக இந்த சாதனம் 33வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி கேமரா பொறுத்தப்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் ரெட்மி கே30 ப்ரோ சாதனம் இந்த சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
Redmi k30 pro launching today: here the expected specification and price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X