ரெட்மி கே30 ஸ்பீட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!
சியோமி நிறுவனம் தனது ரெட்மி கே30 தொடரின் கீழ் புதிய ரெட்மி கே30 5ஜி ஸ்பீட் எடிஷன் என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, வரும் மே 14-ம் தேதி முதல் சீனாவில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும். பின்பு விரைவில் அனைத்து சந்தைகளிலும் இந்த புதிய சாதனம் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

வெளிவந்த ரெட்மி கே30 5ஜி ஸ்பீட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது White, Blue Red, Purple மற்றும் New Mintபோன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை உட்பட பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

வெளிவந்த ரெட்மி கே30 5ஜி ஸ்பீட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம், எச்டிஆர் 10, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768 5ஜி ப்ராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் 5ஜி ஸ்டான்ட் அலோன் மற்றும் நான்-ஸ்டான்ட் அலோன் (SA / NSA) -6GHz நெட்வொர்க்குகளை ஆதரிக்கிறது இந்த ஸ்மார்ட்போன். பின்பு ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான நிறுவனத்தின் கஸ்டம் MIUI 11 உடன் இயங்குகிறது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

ரெட்மி கே30 5ஜி ஸ்பீட் எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+2எம்பி டெப்த் சென்சார்+ 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி +2எம்பி டூயல் செல்பீ கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், எல்இடி பிளாஸ், உள்ளிட்ட பல்வேறு தொழிநுட்ப வசதிகள் இவற்றுள் அடக்கம்.

ரெட்மி கே30 5ஜி ஸ்பீட் எடிஷன் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும்கூடுதலாக 512ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,கேமிங், வீடியோ போன்ற பல்வேறு வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக பயன்படும். மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம்.

வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் / குளோனாஸ் / பீடோ, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் டூயல் சிம்3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன்165.3 x 76.6 x 8.79 மிமீ மற்றும் 208 கிராம் எடையும் கொண்டுள்ளது..

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரெட்மி கே30 5ஜி ஸ்பீட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை 1999யுவான் (இந்திய மதிப்பில் ரூ.21,360) ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications