Home
Mobile

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது

சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டு தற்சமயம் புதிய டாப்-எண்ட் ரெட்மி கே20 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஏழாம் தலைமுறை ஆப்டிக்கல் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மறறும் மென்பொருள் போன்ற அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

பின்பு இந்த ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளேம் ரெட், கிளேசியர் புளு மற்றும் கார்பன் ஃபைபர் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340x1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர் மற்றும் அட்ரினோ 640ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு டூயல் சிம் ஸ்லாட் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம்.

கேமரா:

கேமரா:

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா +8எம்பி டெலி போட்டோ லென்ஸ் + 13எம்பி அல்ட்ரா வைடு சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி:

பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்,யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

விலை:

விலை:

இந்திய மதிப்பில்
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.25,200-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.26,200-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.28,230-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.30,245-ஆக உள்ளது.
மேலும் இதனுடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi K20, Redmi K20 Pro With 20-Megapixel Pop-Up Selfie Camera, 4,000mAh Battery Launched: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X