ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி அன்மையில் ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்தஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 29-ம் தேதி முதல் Flipkart's Big Billion Days Offer தலைப்பில் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட உள்ளது.

அதன்படி இந்த விலைகுறைப்பில் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.21,999-ஆக உள்ளது.

ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.27,999-ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் விலைகுறைப்பின்மூலம் ரூ.3000-விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின்
சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி கே20 அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்)
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார்+ 13எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி மூன்றாம் நிலை சென்சார்
செல்பீ கேமரா: 20எம்பி பாப்-அப் செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச்
18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0

ரெட்மி கே20 ப்ரோ அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்)
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி மூன்றாம் நிலை சென்சார்
செல்பீ கேமரா: 20எம்பி பாப்-அப் செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச்
27வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0


Click it and Unblock the Notifications