Home
Mobile

புதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் ரெட்மி கே20 ப்ரோ.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் அன்மையில் தனது ரெட்மி கே20 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அனைத்து இடங்களிலும் அதிக வரவேற்பை பெற்றது என்று தான் கூறவேண்டும்.

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்

இந்நிலையில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனை ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராஸசர் வசதியுடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராஸசர் ஸ்மார்போனுக்கு சிறந்தசெயல்திறனை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி கே20 ப்ரோ டிஸ்பிளே:

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340x1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:

டூயல் சிம் ஸ்லாட் இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு டூயல் சிம் ஸ்லாட் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம்.

20எம்பி செல்பீ கேமரா

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா +8எம்பி டெலி போட்டோ லென்ஸ் + 13எம்பி அல்ட்ரா வைடு சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன.மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் இவற்றுள் அடக்கம்.

இக்கருவி இப்போது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர் மற்றும் அட்ரினோ 640ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்,யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Redmi K20 Pro Exclusive Edition to launch on September 19 and more details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X