மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!
செய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்
சியோமி இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தீபாவளி வித் மி என்ற தலைப்பில் நடக்கும் விலைகுறைப்பு சலுகையில் ரெட்மி கே20ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமர கொண்ட ரெட்மி கே20 ப்ரோ சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.30,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.23,999-விலையில் விற்பனைசெய்யப்படுகிறது.

ரெட்மி கே20 ப்ரோ அம்சங்கள்
டிஸ்பிளே: 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்)
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி/64ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி மூன்றாம் நிலை சென்சார்
செல்பீ கேமரா: 20எம்பி பாப்-அப் செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச் 27வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,
4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0

ரெட்மி கே20 அம்சங்கள்
டிஸ்பிளே 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்)
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார்+ 13எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி மூன்றாம் நிலை சென்சார்
செல்பீ கேமரா: 20எம்பி பாப்-அப் செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச்
18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11,
ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0


Click it and Unblock the Notifications