Home
Mobile

அக்.27-க்கு அப்புறம் இவருதான்.. 10000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. புது REDMI போன்.. எந்த மாடல்?

கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் மட்டுமல்லாமல், அதிக பேக்கப் கொடுக்கும்படியான மாடலாக ரெட்மி கே100 (REDMI K100) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மட்டுமல்லாமல், சிப்செட், கேமிங் சிப் மற்றும் கலர் உள்ளிட்ட விவரங்கள் இப்போது உறுதியாகி இருக்கின்றன.

வருகிற அக்டோபர் 27ஆம் தேதி சீன மார்கெட்டில் இந்த ரெட்மி கே100 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஃபயர்பிளை கிரீன் (Firefly Green) கலரில் கிடைக்க இருக்கிறது. பஞ்ச்-ஹோல் கட்அவுட் கொண்ட டிஸ்பிளே வருகிறது. போஸ் டியூனிங் ஆடியோ கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. டூயல் சிப்செட் கொண்ட மாடலாக இந்த ரெட்மி கே100 ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது.

அக்.27-க்கு அப்புறம் இவருதான்.. 10000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே!

அதாவது, வழக்கமாக கிடைக்கும்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கேமிங் மற்றும் டிஸ்பிளே என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க டி2 டிப்ஸ்பிளே சிப் (D2 Display Chip) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பீச்சர்களை மட்டுமே ரெட்மி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த ரெட்மி கே100 மாடலின் மற்ற பீச்சர்கள் கசிந்துவிட்டன.

ரெட்மி கே100 அம்சங்கள் (REDMI K100 Specifications): 6.9 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவுடன் இந்த ரெட்மி கே100 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மற்றும் 185Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் சூப்பர் பிக்சல் டெக்னாலஜி (Super Pixel Technology) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, பிரீமியம் டிஸ்பிளே அனுபவம் கிடைக்கும்.

100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10000mAh சிலிகான்-கார்பன் பேட்டரி கிடைக்க இருக்கிறது. மேலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்க இருக்கிறது. 200 எம்பி பிரைமரி கேமரா கிடைக்க இருக்கிறது. மேலும், டெலிபோட்டோ கேமரா கொடுக்க இருக்கிறது. போஸ் டியூனிங் மட்டுமல்லாமல், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட உள்ளன.

அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic Fingerprint Sensor) கிடைக்கிறது. மேலும், IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது, சீன வெளியீட்டுக்கு பிறகு குளோபல் மார்கெட்டில் வெளியாகுமா என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. ஆனால், ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் வெளியாகும்.

அதாவது, இந்த ரெட்மி கே100 ஸ்மார்ட்போனுக்கு முன்னதாகவே சீன மார்கெட்டில் ரெட்மி கே100 ப்ரோ (Redmi K100 Pro) மற்றும் ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் (Redmi K100 Pro Max) மாடல்கள் வெளியாகிவிட்டன. குளோபல் மார்கெட்டில் போகோ எப்9 ப்ரோ (Poco F9 Pro) மற்றும் போகோ எப்9 அல்ட்ரா (Poco F9 Ultra) களமிறங்கிவிட்டன.

இதேபோல ரெட்மி கே100 ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் போகோ எப்9 மாடலாக வெளியாகுமா என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், ரெட்மி கே100 ப்ரோ மற்றும் ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் மாடலை விட மலிவான விலைக்கு இந்த ரெட்மி கே100 கிடைக்கும் என்பதால், குளோபல் மார்கெட்டிலும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
REDMI K100 With 10000mAh Battery To Launch on October 27 in China Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X