ரெட்மி அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 10000mAh பேட்டரி.. IP69K ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே100 (Redmi K100) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். ஒஎல்இடி டிஸபிளே, 50எம்பி கேமரா, 10000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ரெட்மி போன் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரெட்மி கே100 அம்சங்கள் (Redmi K100 specifications): 6.83-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த புதிய ரெட்மி கே100 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz Refresh Rate), டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ், 3200 நிட்ஸ் பிரைட்னஸ், 3,800Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் (Instant Touch Sampling Rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் எஸ்ஒசி (Octa Core Snapdragon 8 Elite 3nm SoC) சிப்செட் உடன் ரெட்மி கே100 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது.
Xiaomi Hyper OS 4 மூலம் ரெட்மி கே100 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இந்த புதிய ரெட்மி போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
50எம்பி மெயின் கேமரா (Light Fusion 800 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி கே100 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ரியர் கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display 3D ultrasonic fingerprint sensor), infrared sensor (இன்பிராரெட் சென்சார்), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio)ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆகிய அதிநவீன அம்சங்கள் இந்த புதிய ரெட்மி போனில் உள்ளன.
IP66+IP68+IP69+IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரெட்மி கே100 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, புளூடூத் 5.4, கலிலியோ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

10000எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி கே100 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக ஸ்னோ வைட், பிளாக், ஃபயர்பிளை கிரீன் ஆகிய நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
ரெட்மி கே100 விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே100 மாடலின் விலை 3499 yuan (ரூ.49,910)-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே100 மாடலின் விலை 4099 yuan (ரூ.58,910)-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே100 மாடலின் விலை 4499 yuan (ரூ.64,180)-ஆக உள்ளது.
அக்டோபர் 31 ஆம் தேதி சீனாவில் இந்த ரெட்மி கே100 போன் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications
