Home
Mobile

காத்திருப்பு ஓவர்.. 10000எம்ஏஎச் பேட்டரி.. 200எம்பி கேமரா.. வருகிறது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே100 ஸ்மார்ட்போனை வரும் அக்டோபர் 27-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் சீனாவில் அறிமுகமானதும் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரெட்மி கே100 அம்சங்கள் (Redmi K100 specifications): 6.83-இன்ச் அமோலெட் டிஸ்பிளே (AMOLED Display) வசதியுடன் ரெட்மி கே100 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளேவில் 185 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (185Hz Refresh Rate), 3500 நிட்ஸ் பிரைட்னஸ், 3,800Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் (Instant Touch Sampling Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

காத்திருப்பு ஓவர்.. வருகிறது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Snapdragon 8 Elite Gen chipset)உடன் ரெட்மி கே100 ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor) உடன் ரெட்மி கே100 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி கே100 ஸ்மார்ட்போன். அதேபோல் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

200எம்பி ரியர் கேமரா உடன் ரெட்மி கே100 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

10000எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி கே100 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

காத்திருப்பு ஓவர்.. வருகிறது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

16ஜிபி வரை ரேம் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் ரெட்மி கே100 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போன் ரெட்மி போன் சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Redmi K100 With 10000mAh Battery 100W Charging 200MP Camera Confirmed Ahead Of Launch in China
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X