Home
Mobile

Redmi ஒரு முடிவோட தான் இருக்கு.. 9000mAh பேட்டரி மாடலை தொடர்ந்து மேலும் 2 புது போன்கள்!

ரெட்மி நிறுவனம் பேக் டூ பேக் சிக்ஸர் அடித்துள்ளது. 9000mAh பேட்டரி உடனான ரெட்மி டர்போ 5 மேக்ஸ் (இந்தியாவில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஆக அறிமுகமாகும்) ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் லீக் ஆன வேகத்தில்.. ரெட்மி கே100 சீரீஸ் (Redmi K100 Series) ஸ்மார்ட்போன்கள் குறித்த சில முக்கிய விவரங்களும் லீக் ஆகியுள்ளன.

ரெட்மி கே90 சீரீஸ் அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, ரெட்மி கே100 சீரீஸ் குறித்து வெளியாகும் முதல் லீக் இதுவென்று கூறலாம். இந்தியாவிற்கு வரும் போது ரெட்மி கே100 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது போக்கோ எப்9 ப்ரோ (Poco F9 Pro) மற்றும் போக்கோ எப்9அல்ட்ரா (Poco F9 Ultra) என்கிற பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

9000mAh பேட்டரி மாடலை தொடர்ந்து மேலும் 2 புது Redmi போன்கள்!

ஷாவ்மீடைம் (XiaomiTime) வெளிப்படுத்திய விவரங்களின்படி, ரெட்மி நிறுவனம் ஆனது ஏற்கனவே ரெட்மி கே100 சீரீஸின் கீழ் அதன் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஃபிளாக்ஷிப் ஸ்டைல் போன்களை தயாரித்து வருகிறது. இதன்கீழ் ரெட்மி கே100 (Redmi K100) மற்றும் ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் (Redmi K100 Pro Max) என்கிற 2 மாடல்கள் செயல்பாட்டில் உள்ளன.

இப்போதைக்கு இந்த இரண்டு போன்களும் குவால்காமின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஃபிளாக்ஷிப் சிப்களுடன் வரும் என்கிற தகவல் மட்டுமே உள்ளது. ரெட்மி கே100 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். மறுகையில் உள்ள ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் மாடலானது அடுத்துவரும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரல் 6 உடன் அறிமுகம் செய்யப்படலாம்.

9000எம்ஏஎச் பேட்டரி உடன் ரெடியாகவும் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போன்: இந்த ஸ்மார்ட்போன் 4 பக்கங்களிலும் வட்டமான விளிம்புகள் மற்றும் மெல்லிய பெசல்களுடன் கூடிய பெரிய ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன. ரியர் பேனலில் ஆனது முந்தைய ஜெனரேஷன் மாடலை போலவே செங்குத்தான டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளன ஒட்டுமொத்த இந்த வடிவமைப்பு - முன்னதாக வந்த மாடலுடன் அதிகம் ஒத்துப்போகிறது, ஆனால் மிகவும் நேர்த்தியாக தெரிகிறது.

ரெட்மி டர்போ 5 மேக்ஸ் பேட்டரி கெப்பாசிட்டி: இது மிகப்பெரிய 9000எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிராண்ட் இந்த ஸ்மார்ட்போனின் பாஸ்ட் சார்ஜிங் திறன்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும் இந்த ஸ்மார்ட்போனின் 3சி சான்றிதழ் ஏற்கனவே 100W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இதில் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இருக்க வாய்ப்பில்லை.

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது முற்றிலும் புதிய டிமன்சிட்டி 9500எஸ் (Dimensity 9500s) சிப்செட்டை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 16 உடன் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா விவரங்கள் குறித்து பெரிய தகவல்கள் இல்லை. முன்னதாக வந்த மாடலை போலவே 50-மெகாபிக்சல் + 8-மெகாபிக்சல் டூயல் கேமரா செட்டப்பை கொண்டிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சீனாவில் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் மாடலாக அறிமுகம் செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் உலக சந்தைகளில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (Poco X8 Pro Max) ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி மாடலை தொடர்ந்து இந்த போக்கோ மாடல் நடப்பு காலாண்டிற்குள் உலகளவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K100 Redmi K100 Pro Max Chipsets Leaked Could Rebrand as Poco F9 Pro Poco F9 Ultra in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X