Redmi அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 8580எம்ஏஎச் பேட்டரி.. IP69 ரேட்டிங்.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே100 ப்ரோ (Redmi K100 Pro) ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய ரெட்மி போன் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்த போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ரெட்மி கே100 ப்ரோ போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ரெட்மி கே100 ப்ரோ (Redmi K100 Pro Specifications): 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2608 × 1200 பிக்சல்ஸ், 185 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (185Hz refresh rate), 4500 நிட்ஸ் பிரைட்னஸ், டிசி டிம்மிங், எச்டிஆர் 10 பிளஸ் சப்போர்ட், டால்பி விஷன், 68.7 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 வி சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 V chipset) உடன் ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்று கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட் சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குவால்காம் AI இன்ஜின், பிரத்யேக D2 கிராபிக்ஸ் சிப், அட்ரினோ GPU போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.
200எம்பி மெயின் கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி கே100 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனின் தரமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி போன்.
8580எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
IP66/IP68/IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் Bose நிறுவனத்தால் ட்யூன் செய்யப்பட்ட 2.1-சேனல் ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளன. ஆகவே இந்த போன் தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவு இந்த புதிய ரெட்மி போனில் உள்ளன. பிளாக், கேபர்நெட் சோவிஞான், ஃபயர்ஃப்ளைஸ் சேஸிங் தி லைட் மற்றும் ஒயிட் ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.
ரெட்மி கே100 ப்ரோ விலை:
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே100 ப்ரோ மாடலின் விலை CNY 3,999 (இந்திய மதிப்பில் ரூ.57,000)-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே100 ப்ரோ மாடலின் விலை CNY 4,399 (இந்திய மதிப்பில் ரூ.62,000)-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே100 ப்ரோ மாடலின் விலை CNY 4,599 (இந்திய மதிப்பில் ரூ.62,000)-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 512மெமரி கொண்ட ரெட்மி கே100 ப்ரோ மாடலின் விலை CNY 4,999 (இந்திய மதிப்பில் ரூ.71,000)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications