மிரண்டு போவீங்க.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. 50W வயர்லெஸ்.. 8580mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஸ்னாப்டிராகன் எலைட் ஜென் 5 வி சீரிஸ் (Snapdragon 8 Elite Gen 5 V Series) சிப்செட் உறுதி செய்யப்பட்டத்தை அடுத்து கேமிங் பிரியர்களை மூக்கில் விரல் வைக்க செய்யும்படியான பேட்டரி பீச்சர்களையும் ரெட்மி கே100 ப்ரோ (Redmi K100 Pro) ஸ்மார்ட்போன் உறுதி செய்திருக்கிறது. மல்டிபிள் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்க இருக்கிறது.
சீன மார்கெட்டில் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இதனால், சிப்செட், கேமரா, பேட்டரி என்று அடுத்தடுத்து பீச்சர்கள் உறுதியாகி வருகின்றன. இதில் பேட்டரி பீச்சர்கள் லேட்டஸ்ட்டாக வெளியாகி ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டையும் மிரள வைத்துள்ளது. பிரீமியம் டெக்னாலஜிகளையும் கொடுக்கிறது.

ரெட்மி கே100 ப்ரோ அம்சங்கள் (Redmi K100 Pro Specifications): 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8580mAh பேட்டரியை இந்த ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 22.5W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
29 சதவீத அல்ட்ரா ஹை சிலிகான் கன்டென்ட் கொடுத்துள்ளது. மேலும், பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging), விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) உள்ளிட்ட பேட்டரி பீச்சர்களையும் கொடுக்க இருக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு பக்காவான மாடலாக இந்த ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போன் இருக்கும். இதேபோல கேமரா பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) டெக்னாலஜி கொண்ட 200 எம்பி மெயின் கேமராவை இந்த ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. இன்-சென்சார் ஜூமிங் மற்றும் லாஸ்லெஸ் ஜூமிங் சப்போர்ட் கொடுக்கிறது. இதுபோக அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் டெலிபோட்டோ கேமராவுடன் கிடைக்க இருக்கிறது.
டிஸ்பிளே பீச்சர்களை பார்க்கையில், 6.9 இன்ச் எம்11 ஓஎல்இடி (M11 OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு சூப்பர் பிக்சல் டெக்னாலஜி (Super Pixel Technology) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 185Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக 4800Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.
கேமிங் பிரியர்களுக்கு பக்கா அவுட்புட் கொடுக்கும்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சீரிஸ் (Qualcomm Snapdragon 8 Elite Gen 5 V Series) சிப்செட்டை இந்த ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. இன்-டிஸ்பிளே 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display 3D Ultrasonic Fingerprint Sensor) கிடைக்க இருக்கிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கிடைக்கிறது. வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது. மேலும், IP68 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த பீச்சர்களுடன் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications