ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 9070mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஸ்மார்ட்போன் மார்கெட்டே மிரளும்படியான பேட்டரி சிஸ்டம் கொண்ட மாடலாக ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் (Redmi K100 Pro Max) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் மாடலின் முழு விவரங்கள் இதோ.
வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரெட்மி கே100 ப்ரோ சீரிஸ் (Redmi K100 Pro Series) மாடல்கள் சீன மார்கெட்டில் வெளியாக இருக்கின்றன. இதில் ரெட்மி கே100 ப்ரோ (Redmi K100 Pro) மற்றும் ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் (Redmi K100 Pro Max) ஆகிய மாடல்கள் கிடைக்க இருக்கின்றன. இதனால், பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இதில் பேட்டரி பீச்சர்கள் மிரளவிடுகின்றன.

ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Redmi K100 Pro Max Specifications): 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9070mAh பேட்டரியை இந்த ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. மேலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) மற்றும் 27W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் (Reverse Wireless Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக வெளியான பீச்சர்களை பார்க்கையில், 6.9 இன்ச் ஆர்ஜிபி ஓஎல்இடி (RGB OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதுவொரு டிசிஎல் எம்1 (TCL M11) டிஸ்பிளே மாடலாகும். இதில் 185Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2K ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கிடைக்கிறது.
பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging), விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கொடுக்கப்பட உள்ளது. கோல்டன் ஒயிட் (Golden White) மற்றும் கபர்னே சோவிஞான் ரெட் (Cabernet Sauvignon Red) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. அதேபோல ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போனின் பீச்சர்களும் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டன.
இதில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8580mAh பேட்டரி கொடுக்கப்படுகிறது. மேலும், 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) டெக்னாலஜி கிடைக்கிறது.
சூப்பர் பிக்சல் டெக்னாலஜி (Super Pixel Technology) கொண்ட 6.9 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை இந்த ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இதிலும் 185Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், 4800Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சீரிஸ் (Snapdragon 8 Elite Gen 5 V Series) சிப்செட் வர உள்ளது.
இன்-டிஸ்பிளே 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display 3D Ultrasonic Fingerprint Sensor) கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி சீன மார்கெட்டில் அறிமுகமாக இருக்கிறது. விலை விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், பிரீமியம் செக்மெண்ட்டில் இந்த ரெட்மி கே100 ப்ரோ சீரிஸ் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications