Home
Mobile

நாளை களமிறங்கும் புது ரெட்மி 5ஜி போன்.. 9070எம்ஏஎச் பேட்டரி.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் நாளை (ஆகஸ்ட் 11) சீனாவில் ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் (Redmi K100 Pro Max) மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியான சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.

ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் (Redmi K100 Pro Max Specifications): ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 chipset) உடன் ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்று கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட் சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

நாளை களமிறங்கும் புது ரெட்மி 5ஜி போன்.. 9070எம்ஏஎச் பேட்டரி.. 200எம்பி

6.9-இன்ச் பிளாட் 2கே டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

200எம்பி மெயின் கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கறி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் போன் அறிமுகமாகும். எனவே இந்த போனின் தரமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி போன்.

9070எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

நாளை களமிறங்கும் புது ரெட்மி 5ஜி போன்.. 9070எம்ஏஎச் பேட்டரி.. 200எம்பி

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகும். மேலும் இந்த மாடலில் Bose நிறுவனத்தால் ட்யூன் செய்யப்பட்ட 2.1-சேனல் ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளன. ஆகவே இந்த போன் தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும்

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவு இந்த புதிய ரெட்மி போனில் இருக்கும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரெட்மி கே100 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ.55000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi K100 Pro Max will be launched in China tomorrow: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X