Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. 8000எம்ஏஎச் பேட்டரி.. 200எம்பி கேமரா.. புது ரெட்மி 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் நாட்களில் இந்த புதிய போன் சீனாவில் அறிமுகமாகும். அதன்பின்பு இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய ரெட்மி போனின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன.

ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போன். அதுவும் இந்த போனில் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதியும் உள்ளது. சில்வர், கிரீன் போன்ற நிறங்களில் இந்த புதிய ரெட்மி போன் வெளிவரும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

மார்க்கெட்டே மிரள போகுது.. 8000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

ரெட்மி கே100 ப்ரோ (Redmi K100 Pro Specifications): ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 வீ சீரிஸ் சிப்செட் ( Snapdragon 8 Elite Gen 5 V Series Chip) உடன் ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்று கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட் சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

6.59-இன்ச் பிளாட் 2கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 185 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (185Hz refresh rate), 4500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

200எம்பி மெயின் கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா + அல்ட்ரா வைடு கேமரா என்கறி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி கே100 ப்ரோ போன் அறிமுகமாகும். எனவே இந்த போனின் தரமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி போன்.

8000எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

மார்க்கெட்டே மிரள போகுது.. 8000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

அதேபோல் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகும். மேலும் இந்த மாடலில் Bose நிறுவனத்தால் ட்யூன் செய்யப்பட்ட ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளன. ஆகவே இந்த போன் தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும்

மேலும் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவு இந்த புதிய ரெட்மி போனில் இருக்கும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரெட்மி கே100 ப்ரோ மாடல் ரூ.50000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credits: Redmi, gizmochina

Best Mobiles in India

English summary
Redmi K100 Pro Design and Specifications Leaked Online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X