பொளந்துட்டான் POCO.. 8000mAh பேட்டரி, 100W சார்ஜிங், 200MP கேமரா, IP69 உடன் புது போன்.. எந்த மாடல்?
முன் குறிப்பு: என்னடா தலைப்பில் போக்கோ ஸ்மார்ட்போன் என்று கூறிவிட்டு, கட்டுரைக்குள் ரெட்மி ஸ்மார்ட்போனை பற்றி பேசுகிறான் என்று குழப்பம் அடைய வேண்டாம். சீனாவில் ரெட்மி ஸ்மார்ட்போன்களாக வரும் ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் உலகளவில் போக்கோ மாடல்களாக ரீபிராண்டிங் செய்யப்படுவது வழக்கம். அப்படியான ஒரு ஸ்மார்ட்போனை பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.
அது ரெட்மி கே100 (Redmi K100) ஸ்மார்ட்போன் ஆகும். 2026-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ரெட்மி கே100 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள், பல மாதங்களுக்கு முன்பாகவே லீக் ஆகியுள்ளன. இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ எப்9 அல்ட்ரா (POCO F9 Ultra) மாடல் ஆக அறிமுகமாக வாய்ப்புள்ளது என்பதால், போக்கோ ரசிகர்கள் ரெட்மி கே100 மீது ஒரு கண் வைப்பதில் எந்த தவறும் இல்லை.

ரெட்மி கே100 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.5கே ரெசல்யூஷன் மற்றும் அதிக ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.59-இன்ச் பிளாட் டிஸ்பிளே
- முன்னதாக கூறப்பட்ட 2என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6-க்கு பதிலாக, குவால்காமின் தற்போதைய உயர்நிலை ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5
- டெலிஃபோட்டோ லென்ஸுடன் இணைக்கப்பட்ட 200எம்பி ப்ரைமரி கேமரா
- 8000mAh பேட்டரி
- 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- IP68 / IP69 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு திறன்
- 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- சிமெட்ரிக்கல் டூயல் ஸ்பீக்கர்கள்
இதோடு சேர்த்து ஷாவ்மீ நிறுவனம் 2கே ரெசல்யூஷனை வழங்கும் 7-இன்ச் டிஸ்பிளே கொண்ட மற்றொரு ரெட்மி கே100 சீரீஸ் ஸ்மார்ட்போனில் பணியாற்றி வருவதாக மற்றொரு லீக் தெரிவிக்கிறது. இது 10,000mAh+ பேட்டரியால் இயக்கப்படும் என்றும், அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார், மெட்டல் ஃபிரேம், மற்றும் IP68/IP69 ரேட்டிங் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு சேசிஸ் போன்ற பிளாக்ஷிப் அம்சங்களுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.
முன்னரே குறிப்பிட்டபடி, ரெட்மி கே 100 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 2026 அக்டோபர் வாக்கில் சீனாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. பின்னர், போக்கோ பிராண்டின் கீழ் உலகளாவிய வேரியண்ட்கள் பின்னர் வெளியாகலாம்ல்; ஒருவேளை 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வரலாம். மேலதிக தகவல்கள் கிடைத்தால், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.
ஷாவ்மீ தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, இந்நிறுவனம் வருகிற மே 21 ஆம் தேதி அன்று ஷாவ்மீ 17 மேக்ஸ் (Xiaomi 17 Max), ஷாவ்மீ ஒய்யு7 ஜிடி (Xiaomi YU7 GT), ஷாவ்மீ பேண்ட் 10 ப்ரோ (Xiaomi Band 10 Pro) மற்றும் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது.
இவைகளில் ஷாவ்மீ 17 மேக்ஸ் ஆனது உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு ஸ்மார்ட்போனாக இருக்கும். இது மிக ஸ்லிம் ஆன பெசல்கள் மற்றும் ஒரு பிளாட் பேனல் வடிவமைப்புடன் கூடிய 6.9-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்ட ஒரு பிக் ஸ்க்ரீன் ஸ்மார்ட்போன் ஆகும். இது மிகவும் வட்டமான மூலைகளுடன் கூடிய நான்கு-வளைவு கொண்ட வ்ராப்அரவுண்ட் ஃபிரேமை பயன்படுத்துவதாக ஷாவ்மீ கூறுகிறது.
ஷாவ்மீயின் முதல் லைக்கா பிராண்டட் 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவானது ஷாவ்மீ 17 மேக்ஸில் இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது, இந்த போனில் 8000mAh பேட்டரி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஷாவ்மீ 17 (Xiaomi 17), ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவும் இங்கே அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications