Home
Mobile

இதுதான் புதிய ரெட்மி டேப்லெட்.. 9100mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே பேட் 2 மாடலை வரும் ஏப்ரல் 21-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். மேலும் இந்த சாதனத்தின் முழு விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரெட்மி கே பேட் 2 அம்சங்கள் (Redmi K Pad 2 Specifications): இந்த ரெட்மி கே பேட் 2 மாடல் 8.8-இன்ச் 3கே எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளியாகும். அதுவும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 1000 நிட்ஸ் பிரைட்னஸ், 540Hz டச் சாம்பிளிங் ரேட் (touch sampling rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

இதுதான் புதிய ரெட்மி டேப்லெட்.. 9100mAh பேட்டரி.. எந்த மாடல்?

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 9500 எஸ்ஒசி (MediaTek Dimensity 9500 SoC) சிப்செட் வசதியுடன் இந்த ரெட்மி கே பேட் 2 மாடலில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

13எம்பி ரியர் கேமரா உடன் இந்த ரெட்மி கே பேட் 2 மாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

HyperOS 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் ரெட்மி கே பேட் 2 மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

9100எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி கே பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

Bose ட்யூன் செய்யப்பட்ட டூயல் ஸ்பீக்கர்கள் ரெட்மி கே பேட் 2 மாடலில் உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த டேப்லெட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீப் பிளாக், ஸ்பாட்லைட் பர்ப்பிள் மற்றும் ஸ்பேஸ் சில்வர் நிறங்களில் ரெட்மி கே பேட் 2 மாடல் வெளியாகும். அதுவும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதி இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் 15,300mm2 வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் ஆதரவுடன் இந்த டேப்லெட் வெளிவரும்.

வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் இந்த சாதனம் வெளியாகும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ரெட்மி கே பேட் 2 மாடல் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photos credits: gizmochina, weibo


Article Corrections

டேப்லெட்

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K Pad 2 images and full specifications leaked online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X