நவம்பர் 30 உறுதி: நெக்ஸ் ஜென் ரேசர், அதிவேக 5ஜி ஆதரவோடு வரும் ரெட்மி 11டி 5ஜி- தாராளமா காத்திருந்து வாங்கலாம்!

|

ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்ந்து போட்டிப்போட்டுக் கொண்டு புதுப்புது அம்சங்களோடு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. அதன்படி ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் 11டி 5ஜி இந்தியாவில் நவம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன்

இந்தியாவில் வரவிருக்கும் ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை சியோமி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நோட் 10 5ஜி சாதனத்தின் வாரிசாக இருக்கும் என கூறப்பட்டது. ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது நோட் 11 தொடரில் இந்திய சந்தையில் நுழைந்த முதல் ஸ்மார்ட்போனாகும். நோட் 11 5ஜி ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

நவம்பர் 30 ஆம் தேதி உறுதி

நவம்பர் 30 ஆம் தேதி உறுதி

அதாவது இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 11 5ஜி போன்ற அம்சங்களையே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவல்களை முழுமையாக பார்க்கலாம். ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 30 ஆம் தேதி அன்று அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#NextGenRacer என்ற குறிச்சொல்

#NextGenRacer என்ற குறிச்சொல்

இந்தியாவில் வரவிருக்கும் ரெட்மி நோட் 11 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை நவம்பர் 30 ஆம் தேதி என நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் நிறுவனம் பதிவிட்ட அதிகாரப்பூர் அதிகார்ப்பூர்வ டுவிட்டர் பதிவில் நிறுவனம் அதிகாரப்பூர்வ வெளியீட்டு நேரத்தை நிறுவனம் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் பிற்பகல் 12:30 மணிக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெளியீட்டு நிகழ்வானது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் மூலமாக நேரடியாக ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த பிராண்ட் #NextGenRacer என்ற குறிச்சொற்களையும் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.

பிரத்யேக நேரலை

பிரத்யேக நேரலை

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆன்லைனில் கிடைக்கும் தன்மையையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அமேசான் இந்தியாவில் வரவிருக்கும் நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் பிரத்யேக நேரலையில் இருப்பதால், இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் வாங்குவதற்கு கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11டி 5ஜி அம்சங்கள்

ரெட்மி நோட் 11டி 5ஜி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் #NextGenRacer இந்த அதிகாரப்பூர்வ குறிச்சொல் இந்த சாதனம் கேமிங் சாதனமாக இருக்கும் என்பது உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண வகைகளில் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நோட் 11 5ஜி ஸ்மார்ட்போன் அம்சங்களை பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்பது தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் இது மெமரி விரிவாக்க வசதி ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது.

90Hz புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

முன்னதாக ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனானது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ஆதரவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் உடனான பின்புற கேமரா என இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கென பஞ்ச் ஹோல் கட்அவுட் அமைப்புடன் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஐபி53 சான்றிதழ் மற்றும் எம்ஐயுஐ 12.5 உடனான ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 11டி 5ஜி எதிர்பார்க்கப்படும் விலை

ரெட்மி நோட் 11டி 5ஜி எதிர்பார்க்கப்படும் விலை

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை குறித்து பார்க்கலாம். ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்களை சியோமி தற்போதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் Moneycontrol அறிக்கைப்படி இந்தியாவில் நோட் 11டி சாதனத்தின் விலை விவரங்களை வெளிப்படுத்தி இருக்கிறது. அதில் இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.16,999 ஆக இருக்கும் எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.17,999 ஆக இருக்கும் எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.19999 ஆக இறுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி சாதனத்தின் இந்த விலைப் பிரிவு குறித்து பார்க்கையில், இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் முதல் 5ஜி இயக்கப்பட்ட சாதனமானது லாவா அக்னி 5ஜி-க்கு எதிராக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Redmi Confirmed its Redmi Note 11T Smartphone Going Launch on November 30: Expected Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X