Home
Mobile

ரூ.10000 பட்ஜெட்ல பரபரப்பு.. 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே, 4GB ரேம் உடன் புது Redmi போன்.. எந்த மாடல்?

ரெட்மி (Redmi) நிறுவனத்தின் அடுத்த சூப்பர்-பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகம் செய்யப்பட தயாராகி வருவது போல் தெரிகிறது. அது ரெட்மி ஏ7 சீரீஸ் (Redmi A7 Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த சீரீஸின் கீழ் ரெட்மி ஏ7 மற்றும் ரெட்மி ஏ7 ப்ரோ என்கிற 2 மாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லாந்தின் தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையத்திடமிருந்து (National Broadcasting and Telecommunications Commission - NBTC) சான்றிதழ் பெற்றுள்ளதால், ரெட்மி ஏ7 ஸ்மார்ட்போன் ஆனது ரெட்மி ஏ7 ப்ரோ (Redmi A7 Pro) மாடலுடன் சேர்ந்து கூடிய விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.10000 பட்ஜெட்ல பரபரப்பு.. 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே, 4GB ரேம்

மேலும் ரெட்மி ஏ7 ப்ரோ மாடல் ஆனது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TDRA) வலைத்தளத்திலும் கூட சில நாட்களுக்கு முன்னர் காணப்பட்டது. ஆக, இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது ரெட்ம ஏ7 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு சந்தைகளில் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

ரெட்மி ஏ7 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பாக்கலாம், என்ன விலைக்கு வரலாம்? பெரும்பாலும் இது முன்னதாக அறிமுகமான ரெட்மி ஏ5 (Redmi A5)மாடலுடன் ஒப்பிடும் போது நல்ல மேம்படுத்தல்களுடன் வரும். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது HD+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.9-இன்ச் LCD டிஸ்பிளேவுடன் வரலாம்

சிப்செட்டை பொறுத்தவரை இது யுனிசாக் டி7250 (Unisoc T7250) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இது 4GB ரேம் மற்றும் 128GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை இது 15W சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் வரலாம்.

ஏனென்றால் - முன்னதாக அறிமுகமான ரெட்மி ஏ6 மாடல் ஆனது தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.8999 க்கு வாங்க கிடைக்கிறது. இதற்கும் முன்னதாக, 5ஜி ஆதரவுடன் வந்த ரெட்மி ஏ4 5ஜி மாடல் ஆனது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரூ.9999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆக எப்படி பார்த்தாலும் ரெட்மி ஏ7 விலை ரூ.10,000-ஐ சுற்றித்தான் இருக்கும்.

ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்ள்: ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு கொண்டுள்ளது. டிஸ்பிளேவை பொறுத்தவரை ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 720 x 1640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.88-இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை இது 4ஜிபி LPDDR4X ரேம் உடன் இணைக்கப்பட்ட 4என்எம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட் (4nm Snapdragon 4s Gen 2 chipset) உடன் வருகிறது கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமரா உள்ளது.

முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய 5 மெகாபிக்சல் கேமரா (எப்/2.2 அபெர்க்ஷர்) உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5160mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் பாக்ஸில் ரூ.1,999 மதிப்புள்ள 33W சார்ஜர் முற்றிலும் இலவசமாக (Free 33W Charger) அனுப்பப்படும் என்று அமேசான் இந்தியா வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi A7 With 6000mAh Battery Tipped Launching Soon Expected Specifications Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X